Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ENG vs SL - இங்கிலாந்து, இலங்கை முதல் டெஸ்ட் போட்டி.. எந்த சேனல், ஓடிடி, நேரம் என்ன?

மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இலங்கை அணியின் கேப்டனாக தனஜெய் டி சில்வா களமிறங்குகிறார். இலங்கை அணியில் கருணரத்தனே, நிஷாங்கா, குஷால் மெண்டிஸ், ஆஞ்சிலோ மேத்தீஸ், தினேஷ் சண்டிமால், ஜெஃப்ரி வெண்டர்சே, லகிரு குமாரா போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இங்கிலாந்து அணியை பொறுத்தவரை கேப்டன் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகி இருக்கிறார். இதனால் ஆலிவ் போப் கேப்டனாக செயல்படுகிறார். அது மட்டும் இல்லாமல் தொடக்க வீரர் ஜாக் கிராலி காயம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அவர் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை.

Eng vs sl England vs srilanka

இதனால் டான் லாரன்ஸ் தொடக்க வீரராக களமிறங்குகிறார். இதேபோன்று ஸ்டோக்ஸ் இல்லாததால் வேகப்பந்துவீச்சாளர் மேத்தீவ் போப்ஸ் முதல் டெஸ்ட் போட்டியின் லெவலில் சேர்க்கப்பட்டிருக்கிறார். கடைசியாக இலங்கை அணி இங்கிலாந்துக்கு 2014 ஆம் ஆண்டு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

அதன் பிறகு இங்கிலாந்து மண்ணில் இலங்கை அணி 2016 ஆம் ஆண்டு சுற்றுப் பயணம் மேற்கொண்டது. அதில் இங்கிலாந்து அணி இரண்டுக்கும் பூஜ்ஜியம் என்ற கணக்கில் என்று தொடரை கைப்பற்றியது. அதன் பிறகு 8 ஆண்டுகள் கழித்து இலங்கை அணி மீண்டும் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

இதற்கிடையில் இங்கிலாந்து அணி இரண்டு முறை இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றியை ருசித்து இருக்கிறது. இதனால் இங்கிலாந்துக்கு எதிராக பத்து ஆண்டுகளாக ஒரு டெஸ்ட் போட்டியில் கூட வெற்றி பெறாத சூழலில் இலங்கை அணி உள்ளது.

இந்த வரலாற்றை மாற்றும் அமைப்புடன் இலங்கை வீரர்கள் ஜெயசூர்யா வழிகாட்டுதலில் களமிறங்குகின்றனர். இந்த போட்டி இந்திய நேரப்படி ஆகஸ்ட் 21ஆம் தேதி மதியம் மூன்று முப்பது மணிக்கு தொடங்கும். இந்த போட்டிகள் சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிகளில் பார்க்கலாம். ஆன்லைனில் ஜியோ டிவி ஆப்பிலும், சோனி லைவ் ஆப்பிலும் பார்க்கலாம்.

Story first published: Tuesday, August 20, 2024, 16:51 [IST]
Other articles published on Aug 20, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+