For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பாகிஸ்தானை ஓயிட்வாஷ் செய்த இங்கிலாந்து.. தொடரை முழுமையாக வென்று அசத்தல்.. வரலாற்றில் முதல் முறை

கராச்சி : பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

17 ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானில் டெஸ்ட் போட்டியில் விளையாடிய இங்கிலாந்து அணி, தனது அதிரடி , பேட்டிங் மற்றும் அபார பந்துவீச்சு மூலம் தொடரை 2க்கு0 என்ற கணக்கில் வென்றது.

இந்த நிலையில், 3வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

மெஸ்ஸி உலககோப்பையை வென்றாலும், ரொனால்டோ தான் சிறந்த வீரர்.. 5 காரணங்கள் இதோ? மெஸ்ஸி உலககோப்பையை வென்றாலும், ரொனால்டோ தான் சிறந்த வீரர்.. 5 காரணங்கள் இதோ?

304 ரன்கள்

304 ரன்கள்

தொடக்க வீரர் அப்துல்லா சாஃபிக் 8 ரன்களிலும், ஷான் மசூத் 30 ரன்களிலும் ஆட்டமிழக்க தனது கடைசி டெஸ்டில் விளையாடிய அசார் அலி 45 ரன்கள் சேர்த்தார். வழக்கம் போல் கேப்டன் பாபர் அசாம் போராடி 78 ரன்கள் சேர்த்தார். இறுதியில் சல்மான் 56 ரன்கள் எடுக்க பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 304 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இங்கிலாந்து 354

இங்கிலாந்து 354

இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியில் சாக் கிராலி டக் அவுட் ஆனாலும், அந்த அணி வீரர்கள் தொடர்ந்து அதிரடியை காட்டுகின்றனர். பென் டக்கஙட 26 ரன்களும், ஆலிவ் பேப் அரைசதம் அடிக்க ஜோ ரூட் டக் அவுட் ஆனார். எனினும் நடுவரிசையில் ஹாரி புருக் சதம் விளாச, விக்கெட் கீப்பர் பென் ஃபோக்ஸ் 64 ரன்கள் எடுத்தார். இதனால் இங்கிலாந்து அணி 354 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

பாகிஸ்தான் 216 ரன்கள்

பாகிஸ்தான் 216 ரன்கள்

50 ரன்கள் பின் தங்கிய நிலையில் பாகிஸ்தான் அணி தனது 2வது இன்னிங்சில் களமிறங்கியது. இதில் அசார் அலி தனது கடைசி இன்னிங்சில் டக் அவுட்டாக பாபர் அசாம் மற்றும் சவுத் சகில் அடுத்தடுத்து அரைசதம் கடந்து முக்கிய கட்டத்தில் வெளியேறினர். இதனால் பாகிஸ்தான் அணி 216 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

முதல் தோல்வி

முதல் தோல்வி

இதனையடுத்து 167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய சாக் கிராலி 41 ரன்களும், பென் டக்கட் 82 ரன்களும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 35 ரன்களும் எடுக்க இங்கிலாந்து அணி 170 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து வெற்றியை பெற்றது. அறிமுக வீரராக களமிறங்கிய இங்கிலாந்தின் ரெஹான் அகமது 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பாகிஸ்தான் அணி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சொந்த மண்ணில் முழுமையாக தொடரை இழந்தது இதுவே முதல் முறையாகும்.

Story first published: Tuesday, December 20, 2022, 19:35 [IST]
Other articles published on Dec 20, 2022
English summary
England Whtewashes the Pakistan and first time ever happen in pakistan soil பாகிஸ்தானை ஓயிட்வாஷ் செய்த இங்கிலாந்து.. தொடரை முழுமையாக வென்று அசத்தல்.. வரலாற்றில் முதல் முறை
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X