Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அம்மாடியோவ்...!! முதல் முறை இங்கிலாந்து உலக சாம்பியன்..! பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா?

லண்டன் : 44 ஆண்டு கால கிரிக்கெட் வரலாற்றில் முதன் முறையாக சாம்பியன் பெற்றுள்ள இங்கிலாந்துக்கு 28 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

12வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் கடந்த 30ம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிந்தது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து, நியூசிலாந்து பைனலுடன் 2019ம் ஆண்டு உலக கோப்பை தொடர் முடிவுக்கு வந்தது.

இந்த தொடரில், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் என 10 அணிகள் கலந்து கொண்டன. ரவுண்டு ராபின் முறையில் இந்த உலக கோப்பை தொடர் நடத்தப்பட்டது.

கிரிக்கெட் திருவிழா

கிரிக்கெட் திருவிழா

46 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் மோதியது. லீக் ஆட்டம் முடிவில் முதல் 4 இடங்களை பிடித்த இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு வந்தன.

இங்கிலாந்துக்கு ரூ.28 கோடி

இங்கிலாந்துக்கு ரூ.28 கோடி

அரையிறுதியில் வென்ற இங்கிலாந்தும், நியூசிலாந்தும் பைனலில் சந்தித்தன. பரபரப்பான இந்த போட்டி, சூப்பர் ஓவர் வரை சென்றது. முடிவில், இங்கிலாந்து முதல் முறையாக உலக சாம்பியன் கோப்பையை தட்டிச் சென்றது. அந்த அணிக்கு 28 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

நியூசி.க்கு ரூ. 14 கோடி

நியூசி.க்கு ரூ. 14 கோடி

இந்த தொடருக்காக, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மொத்தமாக ரூ.70 கோடியை பரிசு தொகையாக அறிவித்திருந்தது. 2வது இடம் பெற்ற நியூசிலாந்துக்கு ரூ.14 கோடி வழங்கப்பட்டது. சாம்பியன் பட்டம் வென்ற அணிக்கு கடந்த முறை (2015) ரூ.26 கோடியும், 2வது இடம் பெற்ற அணிக்கு ரூ.12 கோடியும் வழங்கப்பட்டது. தற்போது இந்த இரண்டு தொகையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பரிசுக் தொகை எவ்வளவு?

பரிசுக் தொகை எவ்வளவு?

அரைஇறுதியில் தோல்வியடைந்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு தலா ரூ.5 கோடியே 61 லட்சம் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. கடந்த உலக கோப்பை போட்டியில் அரைஇறுதியில் தோல்வி கண்ட அணிகளுக்கு ரூ.4 கோடியே 20 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது. லீக் சுற்றில் அணிகளின் ஒவ்வொரு வெற்றிக்கும் ரூ.28 லட்சம் அளிக்கப்பட்டுள்ளது. லீக் சுற்றுடன் வெளியேறும் அணிகளுக்கு ரூ.70 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

Story first published: Monday, July 15, 2019, 2:16 [IST]
Other articles published on Jul 15, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+