மொயின் அலி சுழலில் சிக்கி சரிந்த ஆஸி.. இங்கிலாந்து அபார வெற்றி!
லண்டன் : ஆஸ்திரேலியா அணி 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு டி20 போட்டியில் பங்கேற்பதற்காக இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.
இரு அணிகளுக்கிடையேயான முதல் ஒரு நாள் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. டாசில் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக விக்கெட் கீப்பர் டிம் பெய்ன் பங்கு பெறும் முதல் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

தொடக்க ஆட்டக்கார்களாக ஆரான் பின்ச் மற்றும் டிராவிஸ் ஹெட் களமிறங்கினர். அணியின் எண்ணிக்கை 7 ரன்களாக இருந்தபோது டிராவிஸ் ஹெட், மொயின் அலி பந்தில் ஆட்டமிழந்தார். முதல் 10 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்கள் இழந்து 48 ரன்களையே எடுத்தது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சரிவர விளையாடாத காரணத்தினால் 90 ரன்களில் 5 விக்கெட்களை இழந்தது.
அதன் பின்னர் ஆடிய மேக்ஸ்வெல் மற்றும் அகர் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். மேக்ஸ்வெல் 60 ரன்களில் ஆட்டமிழந்தார். அகர் 40 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்தின் சிறப்பான பந்துவீச்சில் ஆஸ்திரேலியா அணி 47 ஓவர்களில் 214 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் மொயின் அலி , பிளங்கெட் சிறப்பாக பந்து வீசி தலா 3 விக்கெட்கள் வீழ்த்தினர் .
அதன் பின்னர் ஆடதொடங்கிய இங்கிலாந்து அணி முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே முதல் விக்கெட்டை இழந்தது. ராய் ரன் ஏதும் எடுக்கமாலேயே அவுட் ஆனார். அடுத்து வந்த ஹேல்ஸ் 5 ரங்களில் ஆட்டமிழக்க, அதனை தொடர்ந்து அதன் பின்னர் பார்ஸ்டோவ் 28 ரன்களில் அவுட் ஆனார். அதன் பின்னர் ஜோடி சேர்ந்த மோர்கன் மற்றும் ரூட் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தனர்.
இங்கிலாந்து அணி 38.4 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் எடுத்து தடுமாறியது. அதன் பின்னர் வந்த டேவிட் வில்லி 35 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். முடிவில் இங்கிலாந்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
ஆட்டநாயகன்: மொயின் அலி
Story first published: Thursday, June 14, 2018, 14:39 [IST]
Other articles published on Jun 14, 2018


Click it and Unblock the Notifications