Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டி20 உலக கோப்பை: கடின இலக்கை விரட்டிய இங்கிலாந்து சாதனை வெற்றி !

மும்பை: உலக கோப்பை கிரிக்கெட்டின் லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 230 ரன்களை விரட்டிப் பிடித்து சாதனை வெற்றி பெற்றது இங்கிலாந்து.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்ற சூப்பர் 10 லீக் ஆட்டத்தில் குரூப்-1ல் இடம்பெற்றுள்ள தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் விளையாடின. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் மோர்கன், தென் ஆப்பிரிக்காவை பேட்டிங் செய்ய அழைத்தார்.

England win by two wickets aganist of south africa in World T20

தென் ஆப்பிரிக்காவுக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய ஆம்லா, குயின்டன் டி காக் இருவரும் இங்கிலாந்து பந்துவீச்சை நாலாபுறமும் பறக்க விட்டனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 92 ரன்கள் குவித்தது.

இங்கிலாந்தின் பந்து வீச்சை பவுண்டரி, சிக்சர்களாக பறக்க விட்ட அம்லா 31 பந்துகளில் 7 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 58 ரன்கள் எடுத்தார். 24 பந்துகளை எதிர்கொண்ட டி காக் 7 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 52 ரன்கள் குவித்தார். இவர்கள் இருவரையும் மொயீன் அலி அவுட் ஆக்கினார். டிவில்லியர்ஸ் 8 பந்துகளில் 2 சிக்சர் உள்பட 16 ரன்களில் ஆட்டமிழந்தார்.

கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடிய டுமினி ஆட்டமிழக்காமல் 28 பந்துகளில் 54 ரன்களும், மில்லர் 12 பந்துகளில் 28 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்த, 20 ஓவர் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 4 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து அணி சார்பில், மொயின் அலி 2 விக்கெட் வீழ்த்தினார். டேவிட் வில்லி, அதில் ரஷீத் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்

230 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை விரட்டி களம் இறங்கி இங்கிலாந்து வீரர்கள் நாங்களும் சலைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் விதமாக தென்னாப்பிரிக்க பந்து வீச்சை சிதறடித்தனர்.

முதல் 2 ஓவர்களில் அந்த அணி 44 ரன்கள் குவித்தது. அந்த அணியின் ஜேசன் ராய், தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்தார். அவர் 16 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்ஸர் உள்பட 43 ரன்களை விளாசினார்.

ஹேல்ஸ் 7 பந்துகளில் 17 ரன்களும், ஸ்டோக்ஸ் 9 பந்துகளில் 15 ரன்களும் எடுத்தனர். ஜோ ரூட் 44 பந்துகளில் 83 ரன்கள் குவித்தார். அவர் 6 பவுண்டரிகளையும், 4 சிக்ஸர்களையும் விளாசினார்.

கடைசி ஓவரில் 1 ரன் மட்டுமே எடுக்க வேண்டி இருந்த நிலையில் ஆட்டத்தின் போக்கு மாறிவிடுமே என்று ஒவ்வொரு நிமிடமும் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது. அந்த ஓவரில் இங்கிலாந்து அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. இருப்பினும் டூம்னி வீசிய அந்த ஓவரின் நான்காவது பந்தில் மொயின் அலி ஒரு ரன் எடுக்க இங்கிலாந்து அணி சாதனை வெற்றி பெற்றது.

Story first published: Friday, March 18, 2016, 23:39 [IST]
Other articles published on Mar 18, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+