பிங்க் பால் போட்டி.. 3வது டெஸ்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்.. இந்தியாவிற்கு அதிர்ச்சி
அகமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது தொடங்கி உள்ளது. இரண்டு அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் இங்கிலாந்து வென்ற நிலையில் இரண்டாவது போட்டியில் இந்தியா வென்றது.
இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என்ற கணக்கில் இந்தியா சமன் செய்துள்ளது. இந்த நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது அகமதாபாத் மைதானத்தில் தொடங்கி உள்ளது.

மைதானம்
அகமதாபாத்தில் உள்ள மோதேரா மைதானத்தில் ஆட்டம் நடக்க உள்ளது. 9 பிட்ச்கள் அடங்கிய இந்த மைதானம் இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மூலம் திறக்கப்பட்டது. இன்று திறக்கப்பட்ட மோதேரா மைதானத்திற்கு பிரதமர் மோடியின் பெயர் சூட்டப்பட்டு உள்ளது.

பிங்க் பால்
இரவு பகல் ஆட்டமான இந்த போட்டியில் பிங்க் பால் பயன்படுத்தப்பட உள்ளது. ஸ்பின் பவுலிங்கிற்கு ஏற்றபடி பிட்ச் மாற்றப்பட்டுள்ளது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. பிங்க் பால் போட்டி என்பதால் டாஸ் வென்றது இங்கிலாந்து அணிக்கு சாதகமாக மாறியுள்ளது.

மாற்றம்
இன்று ஆடும் இந்திய அணியில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த பிட்ச் ஸ்பின் பவுலிங்கிற்கு ஏற்றது ஆகும். இதனால் இந்திய அணியில் 3 ஸ்பின் பவுலர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் இந்திய அணியில் குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு வாஷிங்க்டன் சுந்தர் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.

ஆடும் அணி
இன்று ஆடும் இந்திய அணியில் கோலி, ரோஹித், கில், புஜாரா, ரஹானே, பண்ட், அஸ்வின், வாஷிங்க்டன் சுந்தர் அக்சர் பட்டேல், இஷாந்த் சர்மா, பும்ரா ஆகியோர் இங்கிலாந்துக்கு எதிராக களமிறங்குகிறார்கள்.


Click it and Unblock the Notifications