Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அதிரடி வெற்றி 2-1 என்ற கணக்கில் முந்தியது இங்கிலாந்து!

அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 3வது டி20 போட்டி அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று முடிந்துள்ளது.

Recommended Video

8 விக்கெட் வித்தியாசத்தில் India-வை வீழ்த்திய England.. தொடரிலும் முன்னிலை

இங்கிலாந்து அணி போட்டியில் டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்களை எடுத்தது. விராட் கோலி 77 ரன்களை அடித்தார்.

ஆயினும் இங்கிலாந்து வீரர்கள் ஜேசன் ராய் மற்றும் ஜானி பேர்ஸ்டோ அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தனர்.

டி20 3வது போட்டி

டி20 3வது போட்டி

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான டி20 தொடரின் மூன்றாவது போட்டி இன்றைய தினம் அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களையும் விளையாடி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ரன்களை அடித்தது.

156 ரன்களுக்கு சுருண்ட இந்தியா

156 ரன்களுக்கு சுருண்ட இந்தியா

இந்த போட்டியில் கேப்டன் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை அளித்தார். 46 பந்துகளில் அவர் 77 ரன்களை அடித்து இந்தியாவின் ஸ்கோரை உயர்த்தினார். ஆயினும் கேஎல் ராகுல் டக் அவுட், ரோகித் சர்மா, ரிஷப் பந்த் உள்ளிட்டவர்களும் சிறப்பான ஆட்டத்தை அளிக்காத நிலையில் அணியின் ஸ்கோர் 156க்கு சுருண்டது.

8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

இதையடுத்து களமிறங்கி விளையாடிய இங்கிலாந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. அந்த அணியின் ஜேசன் ராய் 9 ரன்களை அவுட்டான போதிலும், துவக்க வீரர் ஜோஸ் பட்லர் சிறப்பாக விளையாடி 52 பந்துகளில் 83 ரன்களை குவித்து கடைசி வரை விளையாடி வெற்றிக்கு காரணமாக அமைந்தார்.

2க்கு 1 என்ற கணக்கில் முன்னிலை

2க்கு 1 என்ற கணக்கில் முன்னிலை

ஜானி பேர்ஸ்டோவும் அவுட்டாகாமல் 40 ரன்களை குவித்துள்ளார். இதையடுத்து இந்திய அணியின் 157 ரன்கள் இலக்கை இவர்கள் சிறப்பாக பூர்த்தி செய்தனர். இந்த வெற்றியையடுத்து 5 போட்டிகளை கொண்ட இந்த டி20 தொடரில் இங்கிலாந்து 2க்கு 1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

Story first published: Tuesday, March 16, 2021, 23:03 [IST]
Other articles published on Mar 16, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+