டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங்.. இந்திய அணியில் நினைத்து பார்க்காத மாற்றம்.. உள்ளே வந்த புதிய வீரர்
சென்னை: இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் இன்று தொடங்குகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று டெஸ்ட் போட்டி நடக்கிறது.
சென்னை பிட்ச் ஸ்பின் பவுலிங் செய்ய சாதகமான பிட்ச் ஆகும். இதனால் இந்த டெஸ்ட் போட்டியில் ஸ்பின் பவுலர்கள் அதிகம் கவனிக்கப்படுவார்கள்.

பவுலிங்
இதனால் இந்திய அணி கூடுதல் ஸ்பின் பவுலர்களுடன் களமிறங்குகிறது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் 5 பவுலர்கள் இருந்தனர். இதனால் இங்கிலாந்துக்கு எதிரான இந்திய அணியிலும் 5 பவுலர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்திய அணி
இங்கிலாந்துக்கு எதிரான ஆடும் இந்திய அணியில் ரோஹித் சர்மா, சுப்மான் கில், புஜாரா, கோலி, ரஹானே, பண்ட், வாஷிங்க்டன் சுந்தர், அஸ்வின், இஷாந்த் சர்மா, பும்ரா, சபாஷ் நதீம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

புதிய வீரர்கள்
இந்திய அணியில் இருந்து அக்சர் பட்டேல் வெளியேறிய நிலையில் திடீரென இளம் வீரர் சாபஷ் நதீம் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் சிராஜ், குல்தீப் யாதவ் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இந்திய அணி மூன்று ஸ்பின் பவுலர்களுடன் களமிறங்குகிறது.

இங்கிலாந்து
இந்தியாவிற்கு எதிராக இங்கிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இங்கிலாந்து அணியில் ரோரி பர்ன்ஸ், டொமினிக் சிப்லி, டேனியல் லாரன்ஸ், ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஒலி போப் , ஜோஸ் பட்லர், டொமினிக் பெஸ், ஆர்ச்சர், ஜாக் லீக், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் ஆடுகிறார்கள்.


Click it and Unblock the Notifications