Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

3வது டி20 போட்டி துவங்கியது... இங்கிலாந்து டாஸ் வென்று பீல்டிங் தேர்வு

அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 3வது டி20 போட்டி அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் துவங்கியுள்ளது.

இந்த போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்தியாவின் ரோகித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் துவக்க வீரர்களாக களமிறங்கி ஆடி வருகின்றனர்.

இதுவரை விளையாடியுள்ள 2 டி20 போட்டிகளில் 1க்கு 1 என்ற கணக்கில் இரு அணிகளும் தொடரை சமன் செய்துள்ள நிலையில் இன்றைய போட்டி முக்கியத்துவம் பெறுகிறது.

3வது டி20 போட்டி

3வது டி20 போட்டி

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 3வது போட்டி அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் துவங்கியுள்ளது. இதுவரை நடைபெற்றுள்ள இரண்டு டி20 போட்டிகளில் விளையாடி இரு அணிகளும் 1க்கு 1 வெற்றி என்ற கணக்கில் தொடரை சமன் செய்துள்ளன.

வெற்றி யாருக்கு?

வெற்றி யாருக்கு?

இந்நிலையில் இந்த 3வது போட்டியில் யார் வெற்றி பெற்று முன்னிலை பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த முதல் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது. இதையடுத்து நேற்று முன்தினம் நடைபெற்ற 2வது டி20 போட்டியில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இஷான் கிஷன் அதிரடி

இஷான் கிஷன் அதிரடி

2வது போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய இஷான் கிஷன் தைரியமாக போட்டியை எதிர்கொண்டு 28 பந்துகளில் 56 ரன்களை அடித்திருந்தார். தொடர்ந்து கோலி மற்றும் ரிஷப் பந்த்தும் சிறப்பாக விளையாடியதை அடுத்து கடந்த போட்டி இந்தியாவிற்கு வெற்றிகரமாக முடிந்தது.

பீல்டிங் தேர்வு

பீல்டிங் தேர்வு

இதனிடையே இன்றைய போட்டியில் இங்கிலாந்து டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. கடந்த இரு போட்டியில் இடம் பெறாத குறைந்த ஓவர்களின் போட்டியின் துணை கேப்டன் ரோகித் சர்மா இன்றைய போட்டியில் துவக்க வீரராக களமிறங்கவுள்ளார். இதனிடையே கடந்த போட்டியில் அறிமுக போட்டியில் இடம் பெற்றிருந்த சூர்யகுமார் யாதவ் இந்த போட்டியில் இடம்பெறவில்லை.

ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு

ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு

2வது போட்டியில் துவக்க வீரராக களமிறங்கிய இஷான் கிஷன் இன்றைய போட்டியில் 2வது வீரராக களமிறங்கவுள்ளார். கடந்த இரு போட்டிகளில் ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா காரணமாக இன்றைய போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

Story first published: Tuesday, March 16, 2021, 19:41 [IST]
Other articles published on Mar 16, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+