Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியா பேட்டிங்.. அணியில் முக்கிய மாற்றம்.. இங்கிலாந்தில் 3 வீரர்கள் அதிரடி நீக்கம்

லண்டன்: இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான 2வது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.

இந்தியா - இங்கிலாந்து இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. நாட்டிங்கமில் நடைபெற்ற முதல் போட்டியின் கடைசி நாளில் மழை பெய்ததால், ஒரு ஓவர் கூட வீசப்படாமல் ஆட்டம் டிராவானது.

இதனால், இந்திய அணி அருமையான வெற்றி வாய்ப்பை இழந்தது. கடைசி நாளில் இந்தியாவின் வெற்றிக்கு 150 ப்ளஸ் ரன்களே தேவைப்பட்ட நிலையில், கைவசம் 9 விக்கெட்டுகள் மீதமிருந்தும், மழை அனைத்தையும் நாசம் செய்தது.

 டாஸ் வென்று பவுலிங்

டாஸ் வென்று பவுலிங்

இந்த நிலையில், பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இன்று (ஆக.12) 2வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங்கை தேர்வு செய்தது. டாஸ் போடுவதற்கு முன்பே அவ்வப்போது மழை எட்டிப் பார்த்தது. கருமேகங்களும் லார்ட்ஸ் மைதானத்தை சுற்றி சுற்றி வந்தன. இதனால், டாஸ் வென்ற உடனேயே எந்தவித தயக்கமும் இன்றி, பவுலிங்கை தேர்வு செய்தார் கேப்டன் ரூட்.

 களமிறங்கிய ஆண்டர்சன்

களமிறங்கிய ஆண்டர்சன்

இங்கிலாந்து அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. க்ராலேவுக்கு பதில் ஹமீத், ஸ்டூவர்ட் பிராடுக்கு பதில் மார்க் வுட் மற்றும் லாரன்ஸுக்கு பதில் மொயீன் அலி சேர்க்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்து அணியில் ரோரி பர்ன்ஸ், டோமினிக் சிப்லே, ஹசீப் ஹமீட், ஜோ ரூட் (c), ஜானி பேர்ஸ்டோ, ஜோஸ் பட்லர் (w), மொயீன் அலி, சாம் கர்ரன், ஓலே ராபின்சன், மார்க் வூட், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகிய வீரர்கள் இடம் பெற்றுள்ளார். காயம் காரணமாக பிராட் போட்டியில் இருந்து விளக்கியுள்ளார். ஆண்டர்சனும் காயம் காரணமாக அணியில் விளையாட மாட்டார் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால், அவர் இன்று விளையாடுகிறார்.

 கூடுதல் பலம்

கூடுதல் பலம்

இந்திய அணியைப் பொறுத்தவரை, ஒரேயொரு மாற்றம் தான். காயம் அடைந்த ஷர்துல் தாகூருக்கு பதிலாக சீனியர் வீரர் இஷாந்த் ஷர்மா சேர்க்கப்பட்டுள்ளார். ஷர்துலுக்கு பதில் அஷ்வின் சேர்க்கப்பட வேண்டும் என்று பல தரப்பில் இருந்து குரல்கள் எழுந்த நிலையில், இஷாந்துக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இருந்தாலும், இதுவும் நல்ல அப்டேட் தான். இஷாந்த் ஷர்மா தி மோஸ்ட் சீனியர் இந்திய பவுலர். இந்த டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய வேகப்பந்துவீச்சு கூட்டணியில், இங்கிலாந்தில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கும் பவுலர் இஷாந்த் ஷர்மா தான். அந்த வகையில் அவரது இன்க்ளூஷன் இந்தியாவுக்கு கூடுதல் பலமே. இந்திய அணியில் ரோஹித் ஷர்மா, லோகேஷ் ராகுல், புஜாரா, விராட் கோலி (c), அஜிங்கியா ரஹானே, ரிஷப் பந்த் (w), ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, இஷாந்த் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

Recommended Video

IND vs ENG : 3 Highlights from Lord's Test, Day 2 | OneIndia Tamil
 போட்டி தாமதம்

போட்டி தாமதம்

இதுவரை எல்லாம் நன்றாக சென்றுக் கொண்டிருக்கிறது. ஆனால், மீண்டும் மழை வந்து எந்த சேட்டையும் செய்யாமல் இருக்க வேண்டும். இன்று போட்டி தொடங்கும் போது மழைச் சாரல் வீசியதால் தான், டாஸ் 20 நிமிடங்கள் தாமதமானது. போட்டியும் அரை மணி நேரம் தாமதமானது. இந்திய நேரப்படி பிற்பகல் 3:30 மணிக்கு தொடங்க வேண்டிய போட்டி, மாலை 4 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து மழை பெய்யாமல் இருந்தால், ரசிகர்களுக்கு அருமையான விருந்து காத்திருக்கிறது எனலாம்.

Story first published: Thursday, August 12, 2021, 21:35 [IST]
Other articles published on Aug 12, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+