Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

123 ரன்களில் சுருண்ட இங்கிலாந்து.. 74 பந்துகளில் வென்ற நியூசிலாந்து! சவுத்தி, மெக்கல்லம் அபாரம்!!

வெலிங்டன்: நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில், டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்த போதிலும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 123 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து பேட்டிங் செய்த நியூசிலாந்து மெக்கல்லத்தின் அதிரடி ஆட்டத்தால் 12.2 ஓவர்களிலேயே வெற்றி பெற்றது.

உலக கோப்பையின் குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ள இங்கிலாந்தும், நியூசிலாந்தும் இன்று காலை 6.30 மணிக்கு வெலிங்டனில் தொடங்கிய போட்டியில் களம் கண்டன.

இங்கிலாந்து தனது முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் 111 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றிருந்தது. நியூசிலாந்து, இலங்கைக்கு எதிராக 96 ரன்கள் வித்தியாசத்திலும், ஸ்காட்லாந்துக்கு எதிராக 3 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றிருந்தது.

இங்கிலாந்து பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது

இங்கிலாந்து பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது

இந்நிலையில் இவ்விரு அணிகளும் இன்று மோதின. டாசில் வென்ற இங்கிலாந்து கேப்டன் மோர்கன், தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். ஆனால் பந்து வீச்சுக்கு சாதகமான பிட்சில், இங்கிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர். நம்பிக்கை நட்சத்திரம் இயான் பெல், 8 ரன்களிலும், அதிரடியாக ஆட்டத்தை தொடங்கிய மொயின் அலி 20 ரன்களிலும் டிம் சவுத்தியின் அருமையான பந்துகளில் கிளீன் போல்ட் ஆகி விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

அடுத்தடுத்து விக்கெட்டுகள்

அடுத்தடுத்து விக்கெட்டுகள்

கேரி பேலன்ஸ் 10 ரன்களில் பவுல்ட் பந்து வீச்சில் கேன் வில்லியம்சனிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். ஃபார்மில் இல்லாத இயோன் மோர்கன், முடிந்த அளவுக்கு கிரீசில் நிற்க வேண்டும் என்ற எண்ணத்தில் கட்டை போட்டுக் கொண்டிருந்தார். இருப்பினும் 41 பந்துகளில் 17 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டேனியல் வெட்டோரி பந்து வீச்சில் ஆடம் மினேவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

சவுத்தி அபாரம்

சவுத்தி அபாரம்

அப்போது இங்கிலாந்து அணியின் ஸ்கோர் 104 ரன்களுக்கு 4 விக்கெட் என்ற அளவில் இருந்தது. ஆனால் மோர்கனுக்கு பிறகு ஜேம்ஸ்ட் டைலர் டக் அவுட் ஆனார், இவரையும் டிம் சவுத்தி அருமையான அவுட்-ஸ்விங் பந்து வீச்சு முலம் போல்ட் செய்தார். தாக்குப்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லரும் டிம் சவுத்தி பந்தில் விக்கெட் கீப்பர் லூக் ரோன்ச்சியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்ததாக களமிறங்கிய கிறிஸ் வோகக்ஸ்1 ரன் எடுத்திருந்தபோது, சவுத்தி பந்தில் போல்ட் ஆகி அவுட் ஆனார். மறுமுனையில் ஜோ ரூட் போராடிக் கொண்டிருக்க அவருக்கு கம்பெனி கொடுக்க ஆளில்லை. ஸ்டூவர்ட் பிராட் பார்ட்னர்ஷிப் தருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரும் 4 ரன்கள் எடுத்து சவுத்தி பந்தில் வெட்டோரியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

123 ரன்களுக்கு ஆல்அவுட்

123 ரன்களுக்கு ஆல்அவுட்

அடுத்ததாக வந்த ட்டீவன் ஃபின், சவுத்தி பந்தில் ரோஸ் டெய்லரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இங்கிலாந்து 9 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், மறுமுனையில் ஜோ ரூட் 46 ரன்கள் எடுத்து போராடிக் கொண்டிருந்தார். ஒருவிக்கெட்தான் எஞ்சியிருந்ததால், ஜோ ரூட்டும் அதிரடியாக விளையாட தொடங்கினார். ஆடம் மில்னே பந்தை மடக்கி அடிக்க முற்பட, அது பேட்டின் விளிம்பில் பட்டு தேர்ட்மேன் திசையில் நின்ற டேனியல் வெட்டோரியின் கைகளில் தஞ்சம் அடைந்தது. எனவே 33.2 ஓவர்களில் 123 ரன்களுக்கே ஆல் அவுட் ஆகி இங்கிலாந்து சுருண்டது.

பந்து வீச்சாளர்கள் சாதனை

பந்து வீச்சாளர்கள் சாதனை

நியூசிலாந்து தரப்பில் டிம் சவுத்தி சிறப்பாக பந்து வீசி, 33 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். பவுல்ட், ஆடம் மில்னே, வெட்டோரி ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

குறைந்த பந்தில் அரை சதம் அடித்து சாதனை

குறைந்த பந்தில் அரை சதம் அடித்து சாதனை

இதையடுத்து, இடைவேளை தரப்படாமல், உடனடியாக நியூசிலாந்து பேட்டிங் செய்ய அழைக்கப்பட்டது. ஆனால் நியூசிலாந்து தயவு தாட்சண்யமின்றி அதிரடியை ஆரம்பித்தது. குறிப்பாக, தொடக்க வீரரும், கேப்டனுமான பிரெண்டன் மெக்கல்லம், 18 பந்துகளில் 54 ரன்களை கடந்து உலக கோப்பையில் குறைந்த பந்தில் அரை சதம் அடித்த சாதனையை நிகழ்த்தினார். முன்னதாக 2007 உலக கோப்பையில், கனடாவுக்கு எதிராக அவர் 24 பந்துகளில் அரை சதம் அடித்து புரிந்த சாதனையை அவரே தகர்த்தார்.

தொடர்ந்து 4 சிக்சர்கள்

தொடர்ந்து 4 சிக்சர்கள்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய ஸ்டீவன் ஃபின் ஓவரில் அடுத்தடுத்து 4 சிக்சர்கள் பறக்கவிட்டார் மெக்கல்லம். சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த மெக்கல்லம் 25 பந்துகளில் 77 ரன்கள் எடுத்திருந்தபோது, கிறிஸ் வோக்ஸ் வீசிய புல்-டாஸ் பந்தில் கிளீன் போல்ட் ஆகி அவுட் ஆனார். அது இடுப்புக்கு மேலே உயரமாக வந்த பந்தா என்பதை அறிய மூன்றாவது நடுவரின் உதவி கோரப்பட்டது. ஆனால், சரியான அளவில் வந்த பந்துதான் என உறுதி செய்யப்பட்டதால் மெக்கல்லம் பெவிலியன் திரும்பினார். ரசிகர்கள் எழுந்து நின்று கை தட்டி அவருக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.

ஆறுதல் விக்கெட்

ஆறுதல் விக்கெட்

மெக்கல்லம் அவுட் ஆனபோது, நியூசிலாந்து அணி 7.1 ஓவர்களில், 105 ரன்களை குவித்திருந்தது. 9 ஓவர்களில் அந்த அணி 1 விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் எடுத்திருந்தபோது உணவு இடைவேளை விடப்பட்டது. அப்போது மார்டின் குப்டில் 19 பந்துகளில் 22 ரன்களும், கேன் வில்லியம்சன் 10 பந்துகளில் 6 ரன்களும் எடுத்திருந்தனர். அரை மணி நேரம் கழித்து மீண்டும் ஆட்டம் தொடங்கிய நிலையில், 10வது ஓவரை வோக்ஸ் வீசினார். அந்த ஓவரின் 3வது பந்தில் மார்டின் குப்டில் 22 ரன்களில் போல்ட் ஆகிவெளியேறினார்.

நியூசிலாந்து வெற்றி

நியூசிலாந்து வெற்றி

இருப்பினும் ரோஸ் டெய்லர், கேன் வில்லியம்சன் இணைந்து நியூசிலாந்து வெற்றியை உறுதி செய்தனர் 12.2 ஓவர்களில் நியூசிலாந்து அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை எட்டியது. பிராட் வீசிய வைடு பந்து பவுண்டரிக்கு சென்றதோடு ஆட்டம் முடிவுக்கு வந்தது. டெய்லர் 5 ரன்களுடனும், கேன் வில்லியம்சன் 9 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இங்கிலாந்து தரப்பில் வோக்ஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 32 ஆண்டுகளாக இங்கிலாந்தால் நியூசிலாந்தை உலக கோப்பை போட்டிகளில் வெற்றி பெற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, February 20, 2015, 11:24 [IST]
Other articles published on Feb 20, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+