Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

71 வருஷத்தில் இல்லாத மட்டமான ஸ்கோர்..! ஆஸி.யிடம் அசிங்கப்பட்ட இங்கிலாந்து..! போன் நம்பர்களான ரன்கள்

Recommended Video

Ashes 2019 | 71 வருஷத்தில் இல்லாத மட்டமான ஸ்கோர்..! ஆஸி.யிடம் அசிங்கப்பட்ட இங்கிலாந்து- வீடியோ

லீட்ஸ்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆஷஸ் தொடர் 3வது டெஸ்டில், 71 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 67 ரன்களுக்கு சுருண்டு அசிங்கப்பட்டிருக்கிறது.

இங்கிலாந்தில், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதும் பாரம்பரிய டெஸ்ட் கிரிக்கெட் தொடரான ஆஷஸ் தொடர் நடைபெற்றிருக்கிறது. உலக கோப்பையை விட இந்த தொடரை தான் இந்த இரு நாடுகளும் அதிகம் விரும்பி வருகின்றன.

தொடரின் முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியாவுக்கு ஜெயம். 2வது டெஸ்டை ஆஸி. தட்டு தடுமாறி ஒரு வழியாக டிராவாக்கியது. 3வது டெஸ்ட் போட்டி, லீட்ஸில் நடைபெற்று வருகிறது.

2வது நாள் ஆட்டம்

2வது நாள் ஆட்டம்

அதில் இங்கிலாந்தின் இளம் வீரர் ஜோப்ரா ஆர்ச்சர் 6 விக்கெட் கைப்பற்றி அசத்த, ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்சில் 179 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 2வது நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சை துவக்கியது இங்கிலாந்து.

அசால்ட் காட்டிய ஆஸி.

அசால்ட் காட்டிய ஆஸி.

ஆஸ்திரேலிய பவுலர்களின் அசால்ட்டாக பவுலிங்கில் கலக்க, இங்கிலாந்து திணறித் தான் போனது. அட்டாக் பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் முழி பிதுங்கினர் இங்கிலாந்து வீரர்கள். அந்த அணியின் ஜோ டென்லே 12 ரன்கள் எடுத்து மானம் காத்தார் (அப்படி தான் சொல்லணும்)

தொலைபேசி எண்ணான ஸ்கோர்

தொலைபேசி எண்ணான ஸ்கோர்

தவிர மற்ற வீரர்கள் யாரும் ஒற்றை இலக்க ரன்னை தாண்டவில்லை. 4,1 9,9,0,8,4,5,5 என்று தொலைபேசி எண் போன்று இங்கிலாந்து அணியின் ஸ்கோர் இருந்தது. இதனையடுத்து ஆஸ்திரேலியாவின் முன்னிலை 112 ரன்கள் என்ற நிலையில் ஆஷஸ் தொடரை வெல்வதில் அடுத்த அடியை எடுத்து வைத்துள்ளது.

அசத்தல் விக்.

அசத்தல் விக்.

ஆஸ்திரேலியா தரப்பில் ஹேசில்வுட் தமது மிரட்டல் பவுலிங்கில் 30 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை அள்ளினார். பேட்டின்சன் 5 ஒவர் வீசினார். அதில் 2 மெய்ட்ன், 9 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். கமின்ஸ் 23 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை எடுத்தார்.

1948ம் ஆண்டுக்கு பின்னர்

1948ம் ஆண்டுக்கு பின்னர்

இதையடுத்து இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 67 ரன்களுக்கு சுருண்டது. இதன் மூலம் ஆஸ்திரேலிய 112 என்ற வலுவான முன்னிலை பெற்றது. இந்த ஆகாத ஸ்கோரால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் கிரிக்கெட் தொடரில் 1948ம் ஆண்டுக்கு பின் மகாமட்டமான ஸ்கோரை பதிவு செய்தது.

5 முறை ஆல் அவுட்

5 முறை ஆல் அவுட்

அப்போது இங்கிலாந்து 52 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தவிர 2018ம் ஆண்டுக்கு பின் 100 ரன்களுக்குள் இங்கிலாந்து அவுட்டானது இது 4வது முறை. இதே கால கட்டத்தில் மற்ற அணிகள் மொத்தமாகவே 5 முறை மட்டுமே 100 ரன்களுக்குள் ஆல் அவுட்டாகியுள்ளது.

Story first published: Friday, August 23, 2019, 21:54 [IST]
Other articles published on Aug 23, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+