உலக கோப்பை கடைசி ஓவரில் 4 சிக்ஸ் வாரி வழங்கிய இங்கிலாந்து பவுலரின் தாய்க்கு இப்படி ஒரு சோதனையா?
கிறைஸ்ட்சர்ச்: எனது மகனை மிகமோசமாக விமர்சனம் செய்ய வேண்டாம் என்று நியூசிலாந்து ரேடியோ ஸ்டேஷனுக்கு போன் செய்து இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பென் ஸ்ட்ரோக்ஸ் தாய் பேசியதை லைவாக ஒளிபரப்பிய ரேடியோ ஜாக்கிகள் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
உலக கோப்பை டி20 இறுதி போட்டியில் இங்கிலாந்து-மேற்கு இந்திய தீவுகள் அணிகள் மோதின. கடைசி ஓவரில் 19 ரன்கள் எடுத்தால் மே.இ.தீவுகள் வெற்றி பெறலாம் என்று இருந்தது.
அந்த நிலையில், பந்து வீச வந்த பென் ஸ்ட்ரோக் முதல் 4 பந்துகளிலும் சிக்சர்களை வாரி வழங்கி, இங்கிலாந்து தோல்விக்கு காரணமாக அமைந்தார்.

ரேடியோவில் விமர்சனம்
இதுகுறித்து நியூசிலாந்தின் 'ரேடியோ ஹவுராகி' என்ற பிரபல வானொலியில் கடுமையான விமர்சனத்தை ரேடியோ ஜாக்கிகள்முன் வைத்துக் கொண்டிருந்தனர்.

நியூசிலாந்து தாய்
நியூசிலாந்தில் வசித்து வருபவரான பென் ஸ்ட்ரோக்சின் தாய் டிபோரா, வெறுத்து போய், ரேடியோ நிலையத்தை போனில் தொடர்பு கொண்டார்.

வெளிய சொல்லாதீங்க
தான் கூறும் கருத்துக்களை மனதில் வைத்துக்கொண்டு நிகழ்ச்சி நடத்துமாறு ரேடியோ ஜாக்கிகள் ஜெர்மி வெல்ஸ் மற்றும் மேட் ஹீத் ஆகியோரிடம் உறுதி வாங்கியபடி பேச ஆரம்பித்தார் டிபோரா.

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா
"எனது மகன் நியூசிலாந்தை பூர்வீகமாக கொண்டவன். 12 வயது வரை நியூசிலாந்தில் வளர்ந்தவன் என்பது ரேடியோ வாசகர்களில் எத்தனை பேருக்கு தெரியும்? தங்கள் குடும்பத்தை சேர்ந்த ஒருவர் இப்படி ஒரு விளையாட்டில் நெருக்கடியான நிலையை சந்தித்திருந்தால் இப்படியெல்லாம் ரேடியோவை கேட்டு ரசிப்பார்களா? என்று டிபோரா கேள்வி எழுப்பினார்.

கதறலை காசு பார்த்த ஜாக்கி
ஆனால், அந்த இரு ரேடியா ஜாக்கிகளும், தாயின் கதறலை அப்படியே லைவாக ஒளிபரப்பிவிட்டனர். இதையடுத்து அவ்விருவரையும் ரேடியோ நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. இப்படி வெந்த புண்ணில் வேலை பாய்ச்சிட்டீங்களே ஜாக்கிகளா என்று உலகமெங்கும் இருந்து கண்டன குரல்கள் எழுந்துள்ளன.


Click it and Unblock the Notifications