கோலி ஒரு ஜோக்.. வாயை கொடுத்து வம்பில் சிக்கிய வீரர்.. கிழிகிழி என்று கிழித்தெடுத்த ரசிகர்கள்
லண்டன்:இந்தியாவின், உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேன் விராட் கோலியை ஜோக் என்று குறிப்பிட்ட இங்கிலாந்து வீரர் பென் டக்கெட்டை நெட்டிசன்கள் திணற, திணற தாளித்து எடுத்தனர்.
2016ம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்காக அறிமுகமானவர் பென் டக்கெட். இடக்கை பேட்ஸ்மனான அவரின் கடைசி போட்டியும் அதே ஆண்டு இந்தியாவுக்கு எதிராக விளையாடியத தான்.
மிக நன்றாக(?) விளையாடியதால்... அதன் பின்னர் தற்போது உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் ஆடி வருகிறார். தற்போது கோலியை விமர்சித்தற்காக நெட்டிசன்களிடம் வகையாக சிக்கிக் கொண்டார்.
டுவிட்டர் கருத்து
அவர் எப்படி விமர்சனத்தில் சிக்கி கொண்டார் என்பதே சுவாரஸ்யம். ஷவுட்ஸ் என்ற டுவிட்டர் பக்கத்தை கிரிக்கெட் ரசிகர் ஒருவர் நடத்தி வருகிறார். அதில் நுழைந்த பென் டக்கெட்... சும்மா இருந்திருக்கலாம்.

கிண்டல் பதிவு
ஆனால்.. வாய் புளித்ததோ... மாங்கா புளித்ததோ என்று தெரியாமல் கோலியை கிண்டல் செய்திருக்கிறார். அதாவது அந்த ஷவுட்ஸ் டுவிட்டர் பக்கத்தில் ‘விராட் கோலி இஸ் ----- ' என்று குறிப்பிட்டு வெற்றிடத்தை பூர்த்தி செய்யுமாறு அழைப்பு விடுத்திருக்கிறார்.
கோலி ஒரு ஜோக்
அந்த வாக்கியத்தைப் பூர்த்தி செய்யும்போது பென் டக்கெட் ‘எ ஜோக்'என்று பதிவிட்டார். ‘விராட் கோலி இஸ் எ ஜோக்' என்று பொருளானது.அதாவது விராட் கோலி ஒரு கோமாளி என்று பொருள்படுமாறு கூறியிருக்கிறார்.

கொந்தளித்த ரசிகர்கள்
அவ்வளவு தான்... கோலி ரசிகர்கள் டுவிட்டரில் புகுந்து உண்டு, இல்லை என்று பண்ணிவிட்டனர். விராட் கோலி அடித்த சர்வதேச ரன்களில் பாதியையாவது நீ எடுத்தியா? கோலி ஒரு ஜோக்குன்னா... இங்கிலாந்து ப்ளேயர்சை என்னனு சொல்வது? பெயரில் ‘டக் என்று வைத்துள்ளனர் சர்வதேச சதங்கள் பல அடித்து சாதனை படைத்தவரை பற்றி எப்படி பேசலாம்? என்று பொரிந்து தள்ளியுள்ளனர்.

ஆதரவு கருத்துகள்
ஒரு கருத்துக்கு எதிர்கருத்து இருக்கும் என்பது போல... டிக்கெட்டுக்கு ஆதரவாகவும் பதிவுகள் வந்து விழுந்தன. அவர் சரியாக தான் கூறியிருக்கிறார்.. நீங்கள் தான் தவறாக புரிந்து கொண்டு விமர்சித்திருக்கிறீர்கள்.

தொடர்ந்த விமர்சனம்
இங்கிலாந்துக்கு எதிராக எப்போதும் டெஸ்ட் தொடரை கைப்பற்ற முடியாது. டிக்கெட் கூறியது சரி என்றும் கருத்துகள் பதிவாகி உள்ளன. ஆனால்... கோலி ரசிகர்கள் விட்டபாடில்லை. இன்னும் டுவிட்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.


Click it and Unblock the Notifications