
அபார கேட்ச்
இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் மார்க ஹாரிஸ் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜாஸ் பட்லர் அபாரமாக பாய்ந்து கேட்ச் பிடித்தார். இதனால் ஆஸ்திரேலியாவுக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. இதனையடுத்து டேவிட் வார்னர், மார்ன லாபஸ்சேங் ஜோடி இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

பொறுப்பான ஆட்டம்
இருவரும் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இதில் மார்னஸ் லாபஸ்சேங், கடினமான பந்தை லாவகமாக அடிக்காமல் விலகி கொண்டு, அவருக்கு அவரே வெல் பிளேய்ட், வெல் பிளேய்ட் என்று கூறி கொண்டு தனக்கு தானே உற்சாகப்படுத்தி கொண்டார். இதனையடுத்து இருவரும் ரன்களை மெதுவாக சேர்த்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்

வார்னருக்கு அதிர்ச்சி
வார்னரும், லாபஸ்சேங்கும் அடுத்தடுத்து அரைசதம் கடக்க, சிறப்பாக விளையாடிய டேவிட் வார்னர் தொடர்ந்து 2வது முறையாக 95 ரன்களில் ஆட்டமிழந்து, சதத்தை தவறவிட்டார். லாபங்சேங் 95 ரன்கள் எடுத்திருந்த போது கொடுத்த கேட்ச் வாய்ப்பை தவறவிட்டார் ஜாஸ் பட்லர். இதனையடுத்து முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 221 ரன்கள் எடுத்துள்ளது.

இங்கிலாந்து சொதப்பல்
இங்கிலாந்து தரப்பில் பிராட் மற்றும் ஸ்டோக்ஸ் தலா ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தினர். இங்கிலாந்து வீசிய 89 ஓவர்களில் ஆண்டர்சன் வெறும் 9 ஓவர் மட்டுமே வீசினார். 29 ரன்களை விட்டு கொடுத்து விக்கெட் எடுக்கவில்லை. இது இங்கிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. தற்போது 2வது டெஸ்டிலும் ஆஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்தி வருகிறது.


Click it and Unblock the Notifications











