Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலிக்கும் - பென் ஸ்டோக்ஸுக்கு இடையே வெடித்த மோதல் போக்கு... 4வது டெஸ்டில் பரபரப்பு.. வீடியோ

அகமதாபாத் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 4வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலிக்கும் பென் ஸ்டோக்ஸு-க்கும் மோதல் வெடித்துள்ளது.

இந்தியா - இங்கிலாந்து மோதும் 4வது டெஸ்ட் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.

போட்டியின் போது இந்திய அணி கேப்டன் விராட் கோலி மற்றும் இங்கிலாந்து வீரர் ஸ்டோக்ஸுக்கும் இடையே மோதல் போக்கு நிலவிய வீடியோ வைரலாகி வருகிறது.

இறுதி டெஸ்ட்

இறுதி டெஸ்ட்

இந்தியா -இங்கிலாந்து இடையிலான 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற இரு அணிகளும் தீவிரம் காட்டி வருகிறது. போட்டியில் டாஸ் வென்று இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து வருகிறது.

ஆட்டம்

ஆட்டம்

ஒரு புறம் பிட்ச் சர்ச்சை இருக்கும் நிலையில் இன்றைய டெஸ்ட் போட்டியின் உணவு இடைவேளை வரை இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 73 ரன்களை எடுத்துள்ளது. இந்திய அணி தரப்பில் அக்‌ஷர் பட்டேல் 2 விக்கெட்டும், முகமது சிராஜ் 1 விக்கெட்டும் எடுத்துள்ளனர். கடந்த போட்டியை போன்று இல்லாமல் இந்த பிட்ச் கொஞ்சம் பேட்டிங்கிற்கு உதவுவதாக தெரிகிறது.

கோலி மோதல்

கோலி மோதல்

ஆட்டத்தின் 14வது ஓவரை முகமது சிராஜ் வீசினார். அப்போது களத்தில் இருந்த பென் ஸ்டோக்ஸுக்கும், இந்திய அணி கேப்டன் கோலிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் கோலி, தான் அணிந்திருந்த கண்ணாடியை கழட்டி ஆக்ரோஷமாக பேசத்தொடங்கியதால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

முடிவு

முடிவு

பின்னர் அங்கு களத்தில் இருந்த நடுவர் விரைந்து வந்ததால் இருவரும் அமைதியாக கலைந்து சென்றனர். இதற்கான காரணம் இன்னும் வெளியாகாத நிலையில் அது குறித்த வீடியோ வைரலாகி வருகிறது. ஏற்கனவே பிட்ச் குறித்த சர்ச்சையால் இரு அணிகளுக்கும் கருத்து வேறுபாடு நிலவி வரும் நிலையில் மோதல் போக்கு நிலவியுள்ளது.

Story first published: Thursday, March 4, 2021, 17:23 [IST]
Other articles published on Mar 4, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+