Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இன்று தொடங்குகிறது 2வது டி20.... தோல்விக்கு பதிலடி கொடுக்கப்படுமா...இந்திய அணியின் நிலை என்ன?

அகமதாபாத்: இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி மீண்டு வர அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் டி20 தொடரில் இங்கிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இன்று நடைபெறவிருக்கும் 2வது டி20 போட்டியில் இந்திய அணியில் செய்யவுள்ள மாற்றங்கள் குறித்து தெரியவந்துள்ளது.

அனுபவம்

அனுபவம்

அகமதாபாத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி படுதோல்வியடைந்தது. இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணி 124 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், இங்கிலாந்து அணி 15.3 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. ரோகித்திற்கு ஓய்வு, டாப் ஆர்டர் சொதப்பல் என பல்வேறு விமர்சனங்கள் கோலி மீது வைக்கப்பட்டுள்ளது.

அணி மாற்றங்கள்

அணி மாற்றங்கள்

கடந்த முறை ஓப்பனிங்கில் ரோகித் ஷர்மா இல்லாதது அணிக்கு மிகப்பெரும் அடியாக இருந்தது. ஓப்பனிங்கில் களமிறங்கிய ஷிகர் தவான் 4 ரன்களும், கே.எல்.ராகுல் 1 ரன்னும் எடுத்து வெளியேறினர். எனவே இந்த முறை ரோகித் ஷர்மா அணிக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் பவுலிங்கில் ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக தீபக் சாஹர் இருப்பார் என தெரிகிறது.

அணி

அணி

கே.எல்.ராகுல், ரோகித் ஷர்மா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், ஹர்த்திக் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர், அக்‌ஷர் பட்டேல், புவனேஷ்வர் குமார், தீபக் சஹார், யுவேந்திர சாஹால்,

இங்கிலாந்து தரப்பில் ஜேசன் ராய், பட்லர், டேவிட் மாலன், பேர்ஸ்டோ, மோர்கன், ஸ்டோக்ஸ், மொயீன் அலி, சாம் கரண், அடில் ரஷித், ஆர்ச்சர், கிறிஸ் ஜோர்டன்

பிட்ச் ரிப்போர்ட்

பிட்ச் ரிப்போர்ட்

இரு அணிகளும் மோதும் 2வது டி20 போட்டி அகமதாபாத்தில் இன்று தொடங்குகிறது. முதல் டி20 போட்டியை போலவே இது வேகப்பந்து வீச்சாளார்களுக்கு சாதமாய் இருக்கும் என்றும் 2வதாக பேட்டிங் செய்யும் அணிக்கு பேட்டிங் செய்ய ஏதுவானதாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. மேலும் சராசரியாக முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 145 ரன்கள் இருக்கும் என தெரிகிறது.

Story first published: Sunday, March 14, 2021, 18:13 [IST]
Other articles published on Mar 14, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+