ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த இங்கிலாந்து வீரர்கள்.. டாப்புக்குப் போனார் மோர்கன்
Recommended Video

அதிக ரன்கள் குவித்த இங்கிலாந்து வீரர்கள் - மோர்கன் முதலிடம்- வீடியோ
நாட்டிங்ஹாம்: ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த இங்கிலாந்து வீரர்கள் வரிசையில் முதல் இடம் பிடித்தார் இயான் மோர்கன்.
நேற்று ஆஸ்திரேலிய அணிக்கெதிரான ஒரு நாள் போட்டியில் சிறப்பாக விளையாடி 67 ரன்களை குவித்தார். இதன் மூலம் அவர் ஒருநாள் போட்டிகளில் அவர் 5443 ரன்களை குவித்துள்ளார். 180 ஒருநாள் போட்டிகளில் விளையாடி அவர் இச்சாதனை புரிந்துள்ளார். அவரது சராசரி - 37.79

இதில் 10 சதங்களும் 32 அரை சதங்களும் அடங்கும்.
இதற்கு முன்னர் இயான் பெல் 5416 ரன்கள் குவித்ததே சாதனையாக இருந்தது.
மேலும் இப்போட்டியில் இங்கிலாந்து அணி 481 ரன்கள் குவித்து வரலாற்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

ரன் குவிப்பில் முதல் 5 இடங்களில் உள்ள இங்கிலாந்து வீரர்கள்:
மோர்கன் - 5443 ரன்கள் (180 போட்டிகள்)
பெல் - 5416 ரன்கள் (161 போட்டிகள்)
காலிங்வுட் - 5092 ரன்கள் (197 போட்டிகள்)
ஸ்டீவர்ட் - 4677 ரன்கள் (170 போட்டிகள்)
ஜோ ரூட் - 4556 ரன்கள் (111 போட்டிகள்)
தற்போதுள்ள வீரர்கள் வரிசையில் மோர்கனுக்கு அடுத்தபடியாக ஜோ ரூட் மட்டும் இடம் பெற்றுள்ளார். இவர் விரைவில் மோர்கனின் சாதனையை முறியடிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது
ஜோ ரூட் ஒருநாள் சராசரி - 50.62 . தற்போதுள்ள வீரர்களில் இவரது சாரசரியே அதிகமாகும்.
Story first published: Wednesday, June 20, 2018, 18:23 [IST]
Other articles published on Jun 20, 2018


Click it and Unblock the Notifications