For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

விடை பெற்றார் மார்கன்.. இங்கிலாந்து அணியை அதிரடியாக மாற்றியவர்.. சாதனைகள் விவரம் இதோ

லண்டன்: இங்கிலாந்த ஒருநாள், டி20 அணியின் கேப்டன் இயன் மார்கன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

அயர்லாந்து அணியின் கேப்டனாக இருந்த இயன் மார்கன், 2009ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் விளையாட தொடங்கினார்.

இதனைத் தொடர்ந்து 2015ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியின் டெஸ்ட், ஒருநாள் அணி கேப்டனாக மார்கன் செயல்பட்டார்.

அந்த நாள் வந்தது

அந்த நாள் வந்தது

தனது ஓய்வு முடிவு குறித்து பேசிய மார்கன், நெதர்லாந்து அணிக்கு எதிராக விளையாடிய போது என்னால் ரன் குவிக்க முடியவில்லை. அப்போது பல முன்னாள் வீரர்களிடம் பேசினேன், எந்த தருணத்தில் இனி கிரிக்கெட் போது என்று முடிவு எடுத்தீர்கள் என்று குறித்து பேசினேன். அப்போது அவர்கள் எல்லாரும், ஒரு நாள் தூங்கி எழுந்திருக்கும் போது, உங்களுக்கு தோன்றும் என்று பதில் சொன்னார்கள்.

ரசிகனாக பார்ப்பேன்

ரசிகனாக பார்ப்பேன்

அந்த தருணம், எனக்கு நெதர்லாந்தில் வந்துவிட்டது. இப்போது இங்கிலாந்து அணி சிறப்பாக விளையாட தொடங்கிவிட்டார்கள். தற்போது நான் ஒரு ரசிகனாக அமர்ந்து போட்டியை பார்க்க வேண்டியது தான். என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை சிறப்பாக அமைந்தது. இந்த முடிவை நான் எடுத்தது கடினம் தான். ஆனால் நான் எடுத்து முடிவு சரியானது என்று நினைக்கிறேன் என்று இயன் மார்கன் கூறியுள்ளார்.

உள்ளூர் போட்டி

உள்ளூர் போட்டி

இங்கிலாந்த அணிக்காக 2 முறை உலகக் கோப்பை தொடரில் விளையாடி இருக்கிறேன். வீரராகவும், கேப்டனாகவும் நான் சாதித்ததை நினைத்து பெருமைப்படுகிறேன். இங்கிலாந்த ஓயிட் பால் கிரிக்கெட்டின் எதிர்காலம் முன்பை விட தற்போது பிரகாசமாக உள்ளது. எனினும் தொடர்ந்து உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடலாம் என முடிவு எடுத்துள்ளேன்.

மார்கன் சாதனை

மார்கன் சாதனை

இங்கிலாந்து அணிக்காக அதிக போட்டிகள், அதிக ரன்கள் அடித்துள்ள இயன் மார்கன், 126 ஒருநாள் போட்டிகளிலும், 72 டி20 போட்டிகளிலும் கேப்டனாக தலைமை தாங்கி இருக்கிறார். இங்கிலாந்து அணிக்காக 340 போட்டிகளில் விளையாடியுள்ள மார்கன், 16 டெஸ்ட் போட்டிகளிலும் களமிறங்கி இருக்கிறார். 2019 ஆம் ஆண்டு உலககோப்பையை இங்கிலாந்து அணியின் கேப்டனாக இயன் மார்கன் வென்று தந்துள்ளார்.

Story first published: Tuesday, June 28, 2022, 21:24 [IST]
Other articles published on Jun 28, 2022
English summary
Eoin Morgan announced his retirement from international cricket விடை பெற்றார் மார்கன்.. இங்கிலாந்து அணியை அதிரடியாக மாற்றியவர்.. சாதனைகள் விவரம் இதோ
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+