17 சிக்சர்கள்… 57 பந்துகளில் அதிரடி சதம்.. மரணடி மார்கன்…!! உலக கோப்பையில் புதிய சாதனை
Recommended Video
மான்செஸ்டர்: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அதிரடி வீரர் 17 சிக்சர்களுடன் 148 ரன்கள் குவித்து புதிய சாதனையை படைத்திருக்கிறார் இயன் மார்கன்.
இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை ஆட்டம் மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து, பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. இங்கிலாந்து அணியில் வின்ஸ், மொயீன் அலி இடம்பெற்றனர்.
ஆப்கானிஸ்தான் அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. சத்ரன், முஜீபுர் ரஹ்மான், டவ்லத் ஆகியோர் சேர்க்கப்பட்டருந்தனர். ஆட்டத்தில் இங்கிலாந்து தொடக்க வீரர்களாக ஜானி பேர்ஸ்டோவும் ஜேம்ஸ் வின்ஸும் களமிறங்கினர்.

தொடக்கமே ரன்கள்
விரைவாக இருவரும் ரன்கள் குவிக்க ஆரம்பித்தனர். 9 ஓவர்களில் 42 ரன்கள் சேர்த்தார்கள். வின்ஸ், 26 ரன்களில் டவ்லத் ஸத்ரான் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். பிறகு அற்புதமான கூட்டணியை அமைத்தனர் பெயர்ஸ்டோவும், ஜோ ரூட்டும்.

பெயர்ஸ்டோவ் 90
26வது ஓவரில் இந்த ஜோடி 100 ரன்களை எட்டியது. சதமடிப்பார் என பெரிதும் எதிர் பார்க்கப்பட்ட பெயர்ஸ்டோவ், நயிப் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து 90 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் இயன் மார்கன், வந்தவுடன் அதிரடி ஆட்டத்தை வெளிப் படுத்தினார்.

சிக்சர் மழை பொழிந்த ரூட்
அவரது அதிரடியில் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. தனக்கு முன்னால் பேட் செய்து கொண்டிருந்த ரூட்டின் ஸ்கோரை அழகாகவும், விரைவாகவும் கடந்து சென்றார். சிக்சர் மழை பொழிந்து ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தினார்.

மார்கன் அசத்தல்
36 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். 80 ரன்கள் அடித்தபோது அவர் 8 சிக்சர்களை அடித்திருந்தார்.ரஷித் கானின் 43வது ஓவரில் 3 அற்புத சிக்சர்களை அடித்து அசத்தினார் மார்கன்.

சிக்சர்களில் சாதனை
அவரது இந்த சிக்சர்கள் மூலம் 57 பந்துகளில் சதமடித்து சாதனை செய்தார். மொத்தம் 17 சிக்சர்களை அடித்து தள்ளினார். இதன் மூலம், உலக கோப்பை வரலாற்றில் 4வது அதிகவேக சதம் இது. சதத்தை எட்டியபோது அவர் 11 சிக்சர்களை வெளுத்திருந்தார். முடிவில், 50 ஓவர்களில் 397 ரன்களை குவித்தது இங்கிலாந்து.


Click it and Unblock the Notifications