Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இங்கிலாந்து அணி பயிற்சியாளர் ராஜினாமா.. இந்திய ஜாம்பவானுக்கு வாய்ப்பு? முன்னாள் கேப்டன் சூசகம்

லண்டன் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி எப்போதுமே டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டும் தான் முக்கியத்துவம் கொடுக்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனை மாற்றும் விதமாக ஒரு நாள் கிரிக்கெட்டிலும் பல அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்பட்டது.

இதன் காரணமாக 2019 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 t20 உலக கோப்பையையும் கைப்பற்றி அசத்தியது. இந்த நிலையில் இங்கிலாந்து வெள்ளை நிற பந்து போட்டிகளுக்கு மாத்தீவ் மாட் என்பவரும் டெஸ்ட் போட்டிகளுக்கு பிராண்டன் மெக்குல்லம் என்பவரும் பயிற்சியாளராக இருந்து வருகின்றனர்.

india vs srilanka england cricket team Eoin Morgan Rahul dravid

இந்த நிலையில் மாத்தீவ் மாட், தற்போது இங்கிலாந்து அணியின் டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகள பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகி இருக்கிறார். இதனால் இடைக்கால பயிற்சியாளராக முன்னாள் இங்கிலாந்து வீரர் மார்க்கஸ் டிரஸ்கோட்திக் செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் இயன் மார்கன் அளித்துள்ள பேட்டியில் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகிய ராகுல் டிராவிட் இங்கிலாந்து அணிக்கு புதிய பயிற்சியாளராக வரலாம் என்று கூறி இருக்கிறார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர் தற்போது இங்கிலாந்து அணி புதிய பயிற்சியாளரை தேடுகிறது என்னைப் பொருத்தவரை ராகுல் டிராவிட், ரிக்கி பாண்டிங், பிளெமிங் ஆகியோரை பயிற்சியாளராக நியமிக்கலாம். அவ்வளவு எண் மெக்குல்லமே ஒருநாள் கிரிக்கெட்டுக்கும் பயிற்சியாளராக இருக்க சொல்லலாம். டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி சிறப்பாக செயல்படுவதற்கு மெக்குல்லமும் ஒரு காரணம்.

india vs srilanka england cricket team Eoin Morgan Rahul dravid

அவர் உலகின் சிறந்த பயிற்சியாளராக விளங்குகிறார். இங்கிலாந்து அணி தலைமை பயிற்சியாளர் பொறுப்பு என்பது மிகவும் ஸ்பெஷல் ஆனது. எனவே இந்த பதவிக்கு வர முன்னாள் வீரர்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்ட வேண்டும். இதன் மூலம் சிறந்த ஜாம்பவான்கள் அல்லது பயிற்சியாளர்கள் நமது அணிக்குள் வருவார்கள் என்று இயன் மார்கன் கூறியுள்ளார். ராகுல் டிராவிட் ஐபிஎல் தொடரில் தான் பயிற்சியாளராக வரப்போகிறார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இயன் மார்க்கன் இந்த பேட்டி கவனிக்கத்தக்கது.

Story first published: Friday, August 2, 2024, 10:11 [IST]
Other articles published on Aug 2, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+