Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இஎஸ்பிஎன் கிரிக் இன்ஃபோ விருது: சிறந்த கேப்டன் விராத் கோஹ்லி!

டெல்லி: இஎஸ்பிஎன் இன்ஃபோ நிறுவனத்தின் 10-வது விருது வழங்கும் விழாவில் விராத் கோஹ்லிக்கு விருது வழங்கப்பட்டது. இந்த ஆண்டில் நடைபெற்ற 12 டெஸ்ட் போட்டிகளில் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி 9 போட்டிகளில் வென்றது.இதற்காக அவர் இந்த ஆண்டுக்கான சிறந்த கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார்.

இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் விருதையும் மற்றும் ஸ்டுவர்ட் ப்ராட் சிறந்த டெஸ்ட் பவுலருக்கான விருதையும் வென்றுள்ளனர். தென் ஆப்பிரிக்காவின் டி காக் சிறந்த ஒரு நாள் போட்டி வீரர் விருதையும், மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் சுனில் நரைன் சிறந்த ஒரு நாள் போட்டி பவுலர் விருதையும் வென்றுள்ளனர்.

ESPN Cric Info awards: Virat Kohli got Best Captain award

மேற்கு இந்தியத் தீவுகள் டி-20 உலகக் கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்த கார்லஸ் ப்ராத் வெய்ட் சிறந்த டி-20 பேட்ஸ்மென் விருதை வென்றுள்ளார். பங்களாதேஷ் அணியின் ரஹ்மான் சிறந்த டி-20 பவுலர் விருதை வென்றுள்ளார்.

முன்னாள் கிரிக்கெட்டர்களான இயான் சேப்பல், கர்ட்னி வால்ஷ் , ரமீஸ் ராஜா, மஹேலா ஜெயவர்தனே, இஎஸ்பிஎன் கிரிக் இன்ஃபோ நிறுவனத்தின் மூத்த ஆசிரியர்கள் உள்ளிட்டோர் விருது பெற்றவர்களை பரிந்துரைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, February 28, 2017, 8:09 [IST]
Other articles published on Feb 28, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+