Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக அளவில் பிரபலமான விளையாட்டு வீரர்கள்.. கோலி, தோனியுடன் இடம் பிடித்த ஒரே இந்திய வீராங்கனை!!

டெல்லி : ஈஎஸ்பிஎன் நிறுவனம் வெளியிட்டுள்ள உலக அளவில் அதிக பிரபலமான 100 விளையாட்டு வீரர்கள் பட்டியலில் ஒன்பது இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர்.

அந்த ஒன்பது நபர்களில், ஒருவர் மட்டுமே பெண். அவர் மட்டுமே இந்தியா சார்பில் அந்த பட்டியலில் இடம் பெற்ற கிரிக்கெட் அல்லாத வேறு விளையாட்டை சேர்ந்தவர்.

தேர்வு எப்படி?

தேர்வு எப்படி?

ஈஎஸ்பிஎன் நிறுவனம் வருடா வருடம், பிரபலமான விளையாட்டு வீரர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. வீரர்களின் இணைய தேடுதல் மதிப்பு, விளம்பர வருவாய் மதிப்பு மற்றும் சமூக வலைதளங்களில் பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை ஆகியவற்றைக் கொண்டு 2019ஆம் ஆண்டுக்கான 100 பிரபலமான விளையாட்டு வீரர்கள் பட்டியலை தயாரித்துள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவின் சார்பாக இடம் பிடித்துள்ள ஒன்பது பேரின் பட்டியல் இதோ -

விராட் கோலி

விராட் கோலி

டாப் டென்னில் இடம் பிடித்துள்ள ஒரே இந்தியர் விராட் கோலி மட்டுமே. ஏழாம் இடம் பிடித்துள்ளார் விராட் கோலி. இவரது தேடுதல் மதிப்பு - 25, விளம்பர மதிப்பு சுமார் - 137 கோடி, சமூக வலைதள பின்தொடர்தல் - 3.71 கோடி

தோனி

தோனி

13ஆம் இடத்தில் தோனி இடம் பிடித்துள்ளார், இவரது தேடுதல் மதிப்பு - 5, விளம்பர மதிப்பு - சுமார் 193 கோடி, சமூக வலைதள பின்தொடர்தல் - 2.05 கோடி

யுவராஜ் சிங்

யுவராஜ் சிங்

இந்த வரிசையில் ஆச்சரியம் அளிக்கும் இந்திய வீரர் யுவராஜ் சிங் தான். பட்டியலில் 18ஆம் இடம் பிடித்துள்ளார். சர்வதேச போட்டிகளில் பங்கேற்காத நிலையிலும், யுவராஜ் இந்தியாவின் பிரபல வீரராக தொடர்ந்து வருகிறார் இவரது தேடுதல் மதிப்பு - 1, விளம்பர மதிப்பு - சுமார் 213 கோடி, சமூக வலைதள பின்தொடர்தல் - 1.45 கோடி

சுரேஷ் ரெய்னா

சுரேஷ் ரெய்னா

சுரேஷ் ரெய்னா 22ஆம் இடம் பிடித்துள்ளார். ஐவரும் அதிக சர்வதேச போட்டிகளில் ஆடுவதில்லை. இவரது தேடுதல் மதிப்பு - 1, விளம்பர மதிப்பு - சுமார் 137 கோடி, சமூக வலைதள பின்தொடர்தல் - 1.53 கோடி

ரவிச்சந்திரன் அஸ்வின்

ரவிச்சந்திரன் அஸ்வின்

இந்த பட்டியலில் நம்ம ஊர் அஸ்வின் 42ஆம் இடம் பிடித்துள்ளார். இவரது தேடுதல் மதிப்பு - 1, விளம்பர மதிப்பு - சுமார் 117 கோடி, சமூக வலைதள பின்தொடர்தல் - 92 லட்சம்

ரோஹித் சர்மா

ரோஹித் சர்மா

ரோஹித் சர்மா 46ஆம் இடம் பிடித்துள்ளார். கோலிக்கு அடுத்து இந்திய வீரர்களில் அதிக தேடுதல் மதிப்பு கொண்டவர் ரோஹித் சர்மா தான்.எனினும், விளம்பர வருவாய் குறைவாக மதிப்பிடப்பட்டு, 46ஆம் இடம் மட்டுமே பிடித்துள்ளார். இவரது தேடுதல் மதிப்பு - 6, விளம்பர மதிப்பு - சுமார் 59 கோடி, சமூக வலைதள பின்தொடர்தல் - 1.28 கோடி

ஹர்பஜன் சிங்

ஹர்பஜன் சிங்

74 ஆம் இடத்தில் ஹர்பஜன் சிங் இடம் பெற்றுள்ளார். இவரது தேடுதல் மதிப்பு - 1, விளம்பர மதிப்பு - சுமார் 48 கோடி, சமூக வலைதள பின்தொடர்தல் - 91 லட்சம்

சானியா மிர்சா

சானியா மிர்சா

இந்திய அளவில் கிரிக்கெட் வீரர்கள் தவிர்த்து, பிற விளையாட்டில் இடம் பெற்றுள்ள ஒரே விளையாட்டு வீராங்கனை சானியா மிர்சா. ஒன்பது நபர்களில் இவர் மட்டுமே பெண் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரது தேடுதல் மதிப்பு - 2, விளம்பர மதிப்பு - சுமார் 14.68 கோடி, சமூக வலைதள பின்தொடர்தல் - 1.24 கோடி

ஷிகர் தவான்

ஷிகர் தவான்

இந்திய அணியின் துவக்க வீரர் தவான் 74 ஆம் இடம் பிடித்துள்ளார். இவரது தேடுதல் மதிப்பு - 1, விளம்பர மதிப்பு - சுமார் 52 கோடி, சமூக வலைதள பின்தொடர்தல் - 88 லட்சம்

Story first published: Tuesday, March 19, 2019, 18:10 [IST]
Other articles published on Mar 19, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+