Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Euro cup 2024 - பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி.. தொடர்ந்து 2வது முறையாக இறுதிக்கு தகுதி

யூரோ கோப்பை கால்பந்து தொடரில் அரையிறுதி ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை கடைசி நிமிட கோல் அடித்து இங்கிலாந்து அணி வீழ்த்தி தொடர்ந்து இரண்டாவது முறையாக இறுதிச்சுற்றுக்கு சென்றிருக்கிறது.

ஐரோப்பிய அளவில் யார் கிங் என்று என்பதை தீர்மானிக்கும் யூரோ கால்பந்து கோப்பை கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரை முதல் அரை இறுதியில் ஸ்பெயின் அணி பிரான்சஸை வீழ்த்தி இரண்டுக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று ஃபைனலுக்கு சென்றது.

Euro cup 2024 football Eng vs ned

இந்த நிலையில் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் நெதர்லாந்து அணியும் இங்கிலாந்து அணியும் பல பரிட்சை நடத்தியது. இதில் ஆட்டத்தில் ஏழாவது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் செவி சிம்மன்ஸ் முதல் கோலை அடித்து அந்த அணிக்கு முன்னிலை பெற்று கொடுத்தார். இது இங்கிலாந்துக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் ஆட்டத்தின் 18 வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் டென்சில் செய்த ஃபவுலால் இங்கிலாந்துக்கு பெனால்டி கிடைத்தது. இந்த பெனால்ட்டியை பயன்படுத்திக் கொண்டு இங்கிலாந்து வீரர் ஹாரி கேன் அதனை கோலாக மாற்றினார். இதை அடுத்து இரண்டு அணிகளும் ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் இருந்தது. இதனை அடுத்து இரண்டாவது கோல் யார் போடப் போகிறார்கள் என்று பரபரப்பான கட்டம் இருந்தது.

ஒருவேளை போட்டி சமனில் முடிந்து வெற்றியை தீர்மானிக்க பெனால்டி சூட் அவுட் கடைபிடிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் கோல் பால்மர் கொடுத்த பாசை சப்ஸ்டியூட்டாக வந்த ஆலி வேட்கின்ஸ் கோலாக மாற்றினார். இதன் மூலம் கடைசி நிமிடத்தில் வெற்றியை ருசித்த இங்கிலாந்து அணி இரண்டுக்கு ஒன்று என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இதனை அடுத்து தொடர்ந்து இரண்டாவது முறையாக யூரோ கோப்பை பைனலுக்கு இங்கிலாந்து சென்றிருக்கிறது. கடந்த முறை யுரோ கோப்பை பைனலில் இத்தாலி அணியிடம் இங்கிலாந்து அணி பெனால்டி சூட் அவுட் முறையில் தோல்வியில் தழுவியது. இதனால் இம்முறையாவது இங்கிலாந்து சாம்பியன் பட்டத்தை வெல்லுமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஆனால் தற்போது மூன்று முறை சாம்பியன் ஆன ஸ்பெபின் அணி இங்கிலாந்துக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை யூரோ கோப்பை கால்பந்து தொடரில் ஸ்பெயின், இங்கிலாந்து அணியும் மூன்று முறை மோதி இருக்கிறார்கள். இதில் இங்கிலாந்தின் இரண்டு முறை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. வரலாற்று சிறப்புமிக்க இந்த இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை இரவு (இந்திய நேரப்படி திங்கள் அதிகாலை 12:30 மணிக்கு நடைபெற இருக்கிறது.

Story first published: Thursday, July 11, 2024, 6:58 [IST]
Other articles published on Jul 11, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+