Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உயிரை கொடுத்து விளையாடிய வீரர்.. கடைசியில் நோ சொன்ன கோலி.. இவருக்குத்தான் வாய்ப்பா.. போச்சு!

சிட்னி: இந்திய அணியில் பயிற்சி ஆட்டத்தின் மிகவும் சிறப்பாக விளையாடி நம்பிக்கை அளித்த இளம் வீரருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்காது என்று கூறுகிறார்கள்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடருக்காக இந்திய அணி மிகவும் துரிதமாக தயாராகி வருகிறது. பயிற்சி ஆட்டங்களில் சில வீரர்களின் ஆட்டம் பெரிய அளவில் நம்பிக்கை அளித்தது.

இந்த நிலையில் இந்திய அணி டெஸ்ட் தொடருக்கு வேகமாக தயாராகி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் ஆட உள்ள வீரர்களை தேர்வு செய்யும் பணியில் தற்போது கேப்டன் கோலி பிசியாகி உள்ளார்.

பிஸி

பிஸி

இந்த நிலையில் இந்திய அணியில் பயிற்சி ஆட்டத்தின் மிகவும் சிறப்பாக விளையாடி நம்பிக்கை அளித்த இளம் வீரருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்காது என்று கூறுகிறார்கள். அந்த வீரர் வேறு யாரும் இல்லை .. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரிஷாப் பண்ட்தான். இவருக்கு முதல் டெஸ்டில் வாய்ப்பு இல்லை என்கிறார்கள்.

யார்

யார்

இவருக்கு பதிலாக இந்திய அணியில் இளம் வீரர் விர்த்திமான் சாகாதான் கீப்பராக தொடர்வார் என்று கூறப்பட்டுள்ளது. விர்த்திமான் சாகா நல்ல பார்மில் இருக்கிறார். பயிற்சி ஆட்டங்களில் சிறப்பாக ஆடினார். முக்கியமாக ஐபிஎல்லில் நன்றாக ஆடினார்.

ஐபிஎல்

ஐபிஎல்

ஐபிஎல் போட்டிகளில் பண்டை விட இவர் சிறப்பாக பேட்டிங் செய்தார். இதனால் தற்போது விர்த்திமான் சாகாதான் இந்திய அணியில் கீப்பராக தொடர்வார் என்று கூறியுள்ளனர். பண்டிற்கு வாய்ப்பு வழங்கப்படாது என்கிறார்கள்.

பண்ட்

பண்ட்

அதேபோல் பண்ட் கழுத்து வலிமற்றும் அதிக உடல் எடை காரணமாக கஷ்டப்பட்டு வருகிறார். இதனால் அவருக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்படாது. கடந்த பயிற்சி ஆட்டத்தில் பண்ட் சிறப்பாக ஆடி சதம் அடித்தார். ஆனால் இவர் உயிரை கொடுத்து ஆடியது எல்லாம் தற்போது வீணாகி உள்ளது.

Story first published: Monday, December 14, 2020, 19:05 [IST]
Other articles published on Dec 14, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+