Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

40 நாள் கூட கிரிக்கெட் ஆடுறதில்லை.. ஆனால் நடராஜனுக்கு கோடியில் சம்பளம்.. கொதிக்கும் ஸ்ரீகாந்த்!

சென்னை: ரஞ்சி டிராபி, சையத் முஷ்டாக் அலி உள்ளிட்ட எந்த உள்நாட்டு கிரிக்கெட்டிலும் விளையாடாமல் நடராஜன் ஐபிஎல் மூலமாக மட்டும் கோடிகளில் சம்பளம் பெறுவதாக கிரிக்கெட் ஜாம்பவான் ஸ்ரீகாந்த் விமர்சித்துள்ளார். ஆண்டுக்கு 40 நாட்கள் மட்டுமே கிரிக்கெட் விளையாடும் நடராஜனுக்கு, ஐபிஎல் அணிகள் நல்ல ஊதியம் கொடுப்பதாகவும் கூறியுள்ளார்.

அண்மையில் டெல்லி அணியில் இருந்து நடராஜன், ஐதராபாத் அணிக்கு டிராட் செய்யப்பட்டார். அதேபோல் ஐதராபாத் அணி ஜீசன் அன்சாரியை விட்டுக் கொடுத்தது. ஐதராபாத் அணியிடம் ஏற்கனவே ஷகிப் ஹுசைன், பிரபுல் ஹிங்கே உள்ளிட்டோர் இருக்கும் நிலையில், நடராஜன் கொண்டு வரப்பட்டது ஏன் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

Natarajan

அதேபோல் ரூ.10.75 கோடியாக இருந்த நடராஜனின் ஊதியம் ரூ.5 கோடியாக குறைத்து கொண்டுள்ளார். இருப்பினும் 35 வயதாகும் நடராஜனுக்கு இது நல்ல ஆஃபர் என்று பார்க்கப்படுகிறது. இதுகுறித்து கிரிக்கெட் ஜாம்பவான் கிறிஸ் ஸ்ரீகாந்த் பேசுகையில், நடராஜனுக்கு இது மிகச்சிறந்த ஆஃபர் என்று நினைக்கிறேன். ஏனென்றால் அவர் ஆண்டுக்கு 40 நாட்கள் மட்டுமே கிரிக்கெட் விளையாடுகிறார்.

ரஞ்சி டிராபி கூட விளையாடவில்லை என்றாலும், ஐபிஎல் அணிகள் நல்ல ஊதியம் கொடுக்கிறார்கள். கடந்த 2 ஆண்டுகளாகவே நடராஜனின் கிரிக்கெட் வீழ்ச்சியை நோக்கி சரிந்து வருகிறது. ஷகிப் ஹுசைன் மற்றும் பிரபுல் ஹிங்கே இருக்கும் போது, எதற்காக நடராஜன் வாங்கப்பட்டார் என்று தெரியவில்லை. இதனால் ஐதராபாத் அணி வேறு சில வீரர்களை விடுவிக்க திட்டமிடலாம்.

குறிப்பாக உனாத்கட் மற்றும் ஹர்சல் படேல் ஆகியோரை ஐதராபாத் அணி கழற்றிவிட முடிவு செய்திருக்கலாம். பிரபுல் ஹிங்கே மற்றும் ஷகிப் ஹுசைன் இருவரையும் எதிர்காலத்திற்கான வீரர்களாக ஐதராபாத் அணி பார்க்கலாம். ஆனால் ஜீசன் அன்சாரியை டெல்லி அணிக்கு விட்டுக் கொடுத்தது சரியானது அல்ல. ஏனென்றால் டெல்லி ஒரு குட்டி மைதானம்.

அங்கு அவரால் பந்துகளை சிறப்பாக வீச முடியுமா என்ற சந்தேகம் உள்ளது. அதேபோல் நடராஜன் மட்டும் ஐதராபாத் மைதானத்தில் யார்க்கர் பந்துகளை துல்லியமாக வீசவில்லை என்றால், நிச்சயமாக மிகப்பெரிய பின்னடைவு தான். சிக்ஸ், பவுண்டரி என்று வெளுத்து கட்டிவிடுவார்கள் என்று தெரிவித்தார்.

Story first published: Tuesday, October 20, 2026, 23:35 [IST]
Other articles published on Oct 20, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+