Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிஎஸ்கேவிற்காக விளையாடற எல்லா போட்டியுமே எனக்கு சிலிர்ப்ப ஏற்படுத்துது

சென்னை : சிஎஸ்கேவிற்காக விளையாடும் அனைத்து போட்டிகளும் தனக்கு சிலிர்ப்பை ஏற்படுத்துவதாக தென்னாப்பிரிக்காவின் லெக் ஸ்பின்னரும் சிஎஸ்கே வீரருமான இம்ரான் தாஹிர் தெரிவித்துள்ளார்.

Recommended Video

Every game I played for CSK gave me goosebumps: Imran Tahir

சிஎஸ்கே இணையதளத்தில் பேசியுள்ள இம்ரான் தாஹிர், சிஎஸ்கேவில் அனைத்து வீரர்களும் குழுவாக இணைந்து விளையாடுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

சிஎஸ்கேவில் மட்டுமே மற்றவரின் வெற்றியை சக வீரர்கள் கொண்டாடுவதை தான் காண்பதாகவும், உலகின் மற்ற எந்த அணியிலும் இதை காண முடியாது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

சிஎஸ்கே குறித்து சிலிர்ப்பு

சிஎஸ்கே குறித்து சிலிர்ப்பு

சிஎஸ்கே அணியில் இடம்பெற்றுள்ள தென்னாப்பிரிக்க லெக் ஸ்பின்னர் இம்ரான் தாஹிர், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தன்னுடைய வீட்டில் முடங்கியுள்ளார். இந்நிலையில், சிஎஸ்கே அணி குறித்த தன்னுடைய கருத்துக்களை அவர் அந்த அணியின் இணையதளத்தில் பகிர்ந்து கொண்டார். அப்போது, சிஎஸ்கேவிற்காக தான் விளையாடும் அனைத்து போட்டிகளும் தனக்கு சிலிர்ப்பை ஏற்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறப்பான தருணம்

சிறப்பான தருணம்

கடந்த 2018 முதல் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணியில் இடம்பிடித்து விளையாடிவரும் இம்ரான் தாஹிர், கடந்த ஆண்டின் ஐபிஎல் சீசனில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரருக்கான பர்ப்பிள் கேப்பை கைப்பற்றினார். இந்நிலையில் சிஎஸ்கேவில் தான் இணைந்தது சிறப்பான தருணம் என்றும், அங்கு வீரர்கள் ஒரு குழுவாக, குடும்பமாக விளையாடுவதாக குறிப்பிட்டுள்ளார்.

எப்பொழுதும் பாடும் பாடல்

எப்பொழுதும் பாடும் பாடல்

சிஎஸ்கே தனக்கு மட்டுமின்றி தன்னுடைய குடும்பத்தினருக்கும் மிகவும் நெருக்கமான அணி என்று கூறியுள்ள இம்ரான் தாஹிர், சிஎஸ்கேவின் பாடலை தன்னுடைய மகன், மைதானத்தில் இருந்தாலும், தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினாலும் தொடர்ந்து உற்சாகமாக பாடுவான் என்று தெரிவித்துள்ளார். அந்தப் பாடல் அவனுக்கு அந்த அளவிற்கு பிடிக்கும் என்றும் கூறியுள்ளார்.

இதுபோல பார்த்ததில்லை

இதுபோல பார்த்ததில்லை

இரண்டு ஆண்டு தடைக்கு பிறகு கடந்த 2018ல் பேருந்தின் கூரைமீது உற்சாகமாக வீரர்கள் பவனி வந்ததை நினைவு கூர்ந்த இம்ரான், அப்போது ரசிகர்கள் சிஎஸ்கேவிற்கு கொடுத்த வரவேற்பை கண்டு தான் அசந்து விட்டதாகவும், இதற்கு முன்பு இதுபோல தான் பார்த்ததில்லை என்றும் தெரிவித்துள்ளார். சிஎஸ்கேவிற்கு ஆதரவு அளிக்கும் அனைவருக்கும் நன்றியையும் அவர் தெரிவித்துக் கொண்டார்.

Story first published: Friday, May 1, 2020, 10:36 [IST]
Other articles published on May 1, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+