Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோலி மட்டும் சொன்னா போதுமா..? யார் வேணும்னாலும் சொல்லலாம்.. எதை சொல்கிறார் கபில்தேவ்?

Recommended Video

Kapil Dev support kohli | பயிற்சியாளர் தேர்வு விவகாரம்..கோலிக்கு ஆதரவு தெரிவித்த கபில் தேவ்

மும்பை: இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் தேர்வு குறித்து கருத்து கூற கோலி மட்டுமல்ல அனைவருக்கும் உரிமை உண்டு என்று முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்திருக்கிறார்.

இந்திய அணி தலைமை பயிற்சியாளர் மற்றும் பீல்டிங், பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என அனைத்து வகையான பயிற்சியாளர் பதவியும் நடந்த உலகக் கோப்பைத் தொடரோடு முடிவடைந்தது. வெஸ்ட் இண்டீஸ் தொடர் காரணமாக அனைவரது பதவிக்காலமும் 45 நாட்கள் நீட்டிக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து பிசிசிஐ அனைத்து பயிற்சியாளர் பதவிக்கும் விண்ணப்பிக்க ஜூலை வரை கால அவகாசத்தை நீட்டித்தது. தகுதியான நபர்களை தேர்ந்தெடுக்க இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

தேர்ந்தெடுக்க குழு

தேர்ந்தெடுக்க குழு

கபில்தேவ் தலைமையில் அந்த குழு செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது. கபில் தேவ், கெயிக்வாட் மற்றும் சாந்தாரங்கசாமி உள்ளிட்டோர் அடங்கிய குழு புதிய பயிற்சியாளரை தேர்ந்தெடுக்க உள்ளது. வரும் ஆகஸ்ட் 13 மற்றும் 14ம் தேதி நேர்காணல் நடத்தப்பட உள்ளது.

கோலியின் விருப்பம்

கோலியின் விருப்பம்

இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நீடிக்க வேண்டும் என்று கேப்டன் கோலி விருப்பம் தெரிவித்துள்ளார். இது குறித்து தேர்வுக் கமிட்டி உறுப்பினர்களில் ஒருவரான கெய்க்வாட் எதிர் கருத்தை கூறினார். கோலியின் கருத்தை நாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய அவசியமில்லை, இதுகுறித்து கிரிக்கெட் வாரியம் தான் கருத்தில் கொள்ள வேண்டும் என்றார்.

ஆலோசிக்க வேண்டும்

ஆலோசிக்க வேண்டும்

இது குறித்து முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலியும் கருத்து தெரிவித்திருந்தார். அணியின் புதிய தலைமை பயிற்சியாளரை தேர்ந்தெடுக்கும் அனைத்து உரிமைகளும் கேப்டன் என்ற அடிப்படையில் கோலிக்கு உள்ளது. அவர் தனது கருத்துக்களையும், ஆலோசனைகளை நிச்சயம் கொடுக்க வேண்டும். தேர்வுக்குழு நிர்வாகிகளும் கோலியின் கருத்தை ஆலோசிக்க வேண்டும் என்றார்.

கோலிக்கு ஆதரவு

கோலிக்கு ஆதரவு

இந்நிலையில் இந்த விவகாரத்தில் கோலியை ஆதரித்துள்ளார் கபில்தேவ். அவர் கூறியதாவது: பயிற்சியாளர் தேர்வில் கேப்டன் கோலி உட்பட அணியில் உள்ள ஒவ்வொருவரின் கருத்துக்கு மதிப்பளிக்க வேண்டும். பயிற்சியாளர் குறித்து கருத்து சொல்ல கோலிக்கு உரிமை உள்ளது.

பரிந்துரைக்கப்படும்

பரிந்துரைக்கப்படும்

பயிற்சியாளரை நாங்கள் மூவரும் கூட்டாக விவாதித்து முடிவு செய்வோம். பின்னர், இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு எங்களின் பரிந்துரையை அளிப்போம். அதன் பிறகு முறையான அறிவிப்பு வெளியாகும் என்றார்.

Story first published: Friday, August 2, 2019, 12:02 [IST]
Other articles published on Aug 2, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+