Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவை தோற்கடிக்கவே எல்லா டீமும் காத்திருக்கு - விராட் கோலி பெருமிதம்

Recommended Video

இந்தியாவை தோற்கடிக்க எல்லா டீமும் காத்திருக்கு - கோலி

வெல்லிங்டன் : இந்திய அணியை தோற்கடிக்கவே சர்வதேச அளவில் அனைத்து அணிகளும் காத்திருப்பதாகவும், அதில் நியூசிலாந்து அணி மட்டும் விதிவிலக்கல்ல என்றும் இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

வெல்லிங்டனில் உள்ள இந்திய ஹை கமிஷன் அலுவலகத்திற்கு இந்திய அணியினர் அழைப்பின்பேரில் சென்றிருந்தனர். இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்த கோலி, இருநாடுகளுக்கிடையில் பரஸ்பரம் நிலவும் நிர்வாகம் மற்றும் மரியாதை குறித்தும் பெருமிதம் தெரிவித்தார்.

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் 360 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ள இந்திய அணி 60 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ள நியூசிலாந்து அணியுடன் நாளை முதல் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதவுள்ளது.

வெல்லிங்டனில் நாளை துவக்கம்

வெல்லிங்டனில் நாளை துவக்கம்

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நாளை வெல்லிங்டனில் துவங்க உள்ளது. இதற்கென இரு அணிகளும் மும்முரமாக தயாராகி வருகின்றன. இரு அணிகளும் பங்கேற்ற பயிற்சி ஆட்டமும் நடத்தப்பட்டது. இதன் அடிப்படையில் இந்திய அணியில் சில மாற்றங்களும் செய்யப்பட்டு அணி அறிவிக்கப்பட்டது.

விராட் கோலி அறிவிப்பு

விராட் கோலி அறிவிப்பு

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் விராட் கோலி, அடுத்த 3 ஆண்டுகளுக்கு தான் தொடர்ந்து 3 வடிவங்களிலும் தீவிரமாகவிளையாடுவேன் என்று தெரிவித்திருந்தார். தனக்கு 34 வயதாகும்போது, தன்னுடைய உடல்நிலை ஒத்துழைக்காத நிலை ஏற்பட்டால் அப்போது, தலைமையில் மாற்றம் ஏற்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

கேப்டன் பதவியை வகிப்பது கடினம்

கேப்டன் பதவியை வகிப்பது கடினம்

இடைவெளி இல்லாமல் தொடர்ந்து விளையாடுவது மனதளவிலும் உடலளவிலும் பாதிப்பை ஏற்படுத்துவதாக குறிப்பிட்ட கோலி, கடந்த 8 ஆண்டுகளாக, ஆண்டிற்கு 300 நாட்கள் தான் கிரிக்கெட்டிற்காக தொடர்ந்து செலவழிப்பதாக குறிப்பிட்டார். மேலும் அனைத்து வடிவங்களிலும் இந்திய அணியின் கேப்டனாக செயல்படுவது மிகவும் கடினமான செயல் என்றும் அவர் தெரிவித்தார்.

விராட் கோலி பெருமிதம்

விராட் கோலி பெருமிதம்

இதனிடையே, அழைப்பின்பேரில் வெல்லிங்டனில் உள்ள இந்திய ஹை கமிஷனுக்கு இந்திய அணியினர் சென்றனர். அங்கு அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து பேசிய கோலி, தங்களுக்கு அழைப்பு விடுத்த இந்திய தூதரகத்திற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். பல நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள போதிலும், இத்தகைய அழைப்பு இதுவே முதல்முறை என்றும் அவர் கூறினார்.

நியூசிலாந்தும் விதிவிலக்கல்ல

நியூசிலாந்தும் விதிவிலக்கல்ல

இந்திய அணியை தோற்கடிக்க மற்ற நாட்டு அணிகள் விரும்புகின்றன. அந்த அளவிற்கு இந்திய அணி முன்னேற்றம் கண்டுள்ளது. இதற்கு நியூசிலாந்தும் விதிவிலக்கல்ல என்று கோலி தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய கோலி, இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையில் நிலவிவரும் பரஸ்பரம் நிர்வாகம் மற்றும் மரியாதை குறித்து பெருமிதம் தெரிவித்தார்.

பிசிசிஐ வீடியோ வெளியீடு

வெல்லிங்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் இந்திய அணி சென்ற இந்த நிகழ்வை பிசிசிஐ தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டுள்ளது. மேலும் கோலியின் பேச்சும் இந்த வீடியோவில் பதிவிடப்பட்டுள்ளது. இருநாட்டு உறவு உள்ளிட்டவை குறித்து கோலியின் பேச்சை கேளுங்கள் என்றும் பிசிசிஐ அந்த வீடியோவில் தெரிவித்துள்ளது.

Story first published: Thursday, February 20, 2020, 12:53 [IST]
Other articles published on Feb 20, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+