புகழ்வதையோ, பாராட்டுவதையோ கண்டுக்கவே மாட்டேன்... என் வேலையில் கவனமா இருப்பேன்
மான்செஸ்டர்: என்னை புகழ்வதையும், விமர்சிப்பதையும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. வழக்கம் போல எனது ஆட்டத்தின் மீதே கவனமாக இருக்கிறேன் என்று இந்திய அணியின் நட்சத்திர பவுலர் பும்ரா கூறியிருக்கிறார்.
உலக கோப்பை லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி 9 போட்டிகளில் பங்கேற்று 15 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. நாளை நடைபெறும் முதல் அரையிறுதியில் நியூசி.யை சந்திக்கிறது.
இந்நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா கூறி இருப்பதாவது: தற்போது இந்திய அணியில் அனைவரும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். ஆனால் இது தான் இப்போது அணிக்கு தலைவலியாக இருக்கிறது.

யாரை தேர்ந்தெடுப்பது?
ஹர்திக் பாண்டியா மற்றும் ஷமி, புவனேஸ்வர் குமார் மற்றும் நான் ஆகிய அனைவரும் விக்கெட்டுகளை சாய்த்து வருகிறோம். அதனால் யாரை அணியில் தேர்ந்தெடுப்பது என்ற நிலைமை இந்தியாவுக்கு உள்ளது. என்னை புகழ்வதையும், விமர்சிப்பதையும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. வழக்கம் போல எனது ஆட்டத்தின் மீதே கவனமாக இருக்கிறேன் என்றார்.

பும்ராவின் நிதானம்
இக்கட்டான சூழல்களிலும் கடைசி ஓவர்களிலும் பும்ரா நிதானமாக, தெளிவாக இருப்பவர். தமது திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி அணியை வெற்றி பெற வைத்துவிடுகிறார். அவரது நிதானமும் தெளிவும் அவருக்கு மிகப்பெரிய பலம்.

100 விக். சாதனை
இலங்கைக்கு எதிரான போட்டியின்போது வேகமாக 100 விக்கெட்டுகளை சாய்த்த 2வது இந்திய வீரர் என்ற சாதனையை பும்ரா படைத்துள்ளார். பும்ரா ஒருநாள் போட்டியில் தனது முதல் விக்கெட்டை ஆஸ்திரேலிய அணி முன்னாள் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் விக்கெட்டை பறித்தார். தற்போது, இலங்கை கேப்டன் கருண ரத்னே விக்கெட்டை வீழ்த்தி 100வது விக்கெட்டை நிறைவு செய்தார்.

முதலிடத்தில் ஷமி
இதன் மூலம் தமது முதல் விக்கெட்டையும், 100வது விக்கெட்டையும் கேப்டனாக உள்ளவர்களை அவுட்டாக்கி இருக்கிறார். மொத்தம், 57 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 100 விக்கெட்டினை வீழ்த்தியுள்ளார். இந்த பட்டியலில் முதலிடத்தில் 56 போட்டியில் 100 விக்கெட்டுகள் சாய்த்து முதலிடத்தில் ஷமி உள்ளது குறிப்பிடத் தக்கது.


Click it and Unblock the Notifications