Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அப்டியே "திக் திக்"குன்னு இருந்துச்சு பாருங்க... தப்பி மீண்ட டோணி நிம்மதிப் பெருமூச்சு!

ஆக்லாந்து: விராட் கோஹ்லி பேட்டிங் செய்ய களமிறங்கியபோதே, இந்திய அணி நெருக்கடியில்தான் இருந்தது. இருப்பினும் அதில் இருந்து மீண்டு வந்தோம் என்று இந்திய கேப்டன் டோணி கூறினார்.

பரபரப்பான ஆட்டத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்திய பிறகு பரிசளிப்பு நிகழ்ச்சியில் அணி கேப்டன் டோணி கூறியதாவது:

ஆக்லாந்து பிட்சில் பந்துகள் விரைவாக பேட்டை நோக்கி வந்ததாக கூற முடியாது. ஆனால், பந்தை லாவகமாக ரன்களாக மாற்ற போதிய வேகம்தான் வீரர்களிடம் இல்லை என்று கூற வேண்டும்.

Everyone has withstood pressure, says Dhoni

5ம் வரிசையில் ரெய்னா எங்களுக்கு மிக முக்கியமான வீரர். எனக்கும் ரெய்னாவுக்குமான கூட்டணி முக்கியமான தருணத்தில் வந்தது.

கடந்த சில போட்டிகளில் ஒவ்வொரு பிரிவிற்கும் நெருக்கடி ஏற்பட்டது. 3 வேகப்பந்து வீச்சாளர்களாயினும் சரி, ஸ்பின்னர்களாயினும் சரி, பேட்டிங் வரிசையாயினும் சரி ஒவ்வொருவருக்கும் நெருக்கடி தருணங்களும் சவால்களும் ஏற்பட்டன. இதுதான் இருதரப்பு ஒருநாள் தொடரில் விளையாடுவதற்கும் உலகக்கோப்பையில் இங்கு விளையாடுவதற்குமான வித்தியாசம் என்று நான் கருதுகிறேன்.

இருதரப்பு தொடர்களில் கீழ் வரிசை பேட்ஸ்மென்களுக்கு அதிக சவால்கள் ஏற்படுவதில்லை. இதனால்தான் இத்தகைய போட்டிகள் கடினம் ஏனெனில் இங்கு கீழ்வரிசை பேட்ஸ்மென்களுக்கு பேட் செய்ய நிறைய வாய்ப்புகள் ஏற்படவில்லை. இவ்வாறு டோணி கூறினார்.

உலகக்கோப்பைக்கு முன்னதாக நடந்த முத்தரப்பு ஒருநாள் தொடருக்கும், தற்போது இந்திய அணியின் ஆட்டத்துக்கும் உள்ள வேறுபாட்டிற்குக் காரணம் என்ன என்று கேட்ட போது, "தயாராகுதல் உள்ளிட்ட திட்டமிடுதல் போன்ற நடைமுறைகளே காரணம். வீரர்கள் தங்கள் பொறுப்புகளை கையில் எடுத்து கொண்டு சிறப்பாகச் செயல்பட்டதும் இந்த வெற்றிகளுக்கு ஒரு காரணம்.

3 மாதங்களுக்கு மேலாக இங்கு இருந்து வருகிறோம். காலிறுதிக்கு முன்னதாக கொஞ்சம் இடைவெளி தேவை. ஏற்கெனவே பிரேக் இருந்ததால்தான் அணி இந்த அளவுக்கு விளையாட முடிந்துள்ளது. எனவே சிறிய இடைவெளி எப்போதும் உதவும். ரசிகர்கள் பெரிய அளவுக்கு திரண்டு வருகின்றனர் இதுவும் ஒரு உற்சாகமளிக்கிறது." என்றார் டோணி.

Story first published: Saturday, March 14, 2015, 16:50 [IST]
Other articles published on Mar 14, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+