Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி தான் சிறந்த கேப்டன் என்று சொல்வார்கள்.. ஆனால் இவர் தான் அவுட்ஸ்டேன்டிங் - அஸ்வின் கருத்து

சென்னை : இந்திய அணியின் சிறந்த கேப்டன் தோனி தான் என்று சொல்வார்கள். ஆனால் ரோகித் சர்மா சிறந்த மனிதர் என்று தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார். தனது youtube பக்கத்தில் இது குறித்து வீடியோ வெளியிட்டுள்ள அஸ்வின் நீங்கள் இந்திய கிரிக்கெட்டை எடுத்துக் கொண்டால் அனைவருமே தோனி தான் சிறந்த கேப்டன் என்று பேசுவார்கள்.

ஆனால் ரோகித் சர்மா உண்மையிலேயே மிகச்சிறந்த மனிதர். ரோகித் சர்மாவுக்கு அணியில் உள்ள ஒவ்வொரு வீரர் குறித்தும் புரிந்து வைத்திருப்பார். ஒவ்வொரு வீரருக்கும் என்ன பிடிக்கும் என்ன பிடிக்காது என்று எங்களை பற்றி புரிந்து வைத்திருக்கிறார்.

Everyone says MS Dhoni is Best captain but Rohit is out standing says R Ashwin

ஒரு வீரர் பற்றி தெரிந்து கொள்வதற்காக பல முயற்சிகளை அவர் எடுக்கிறார். நான் இறுதிப் போட்டியில் விளையாடாமல் போனதற்கு காரணம் அணியின் உள்ள காம்பினேஷன் தான். நான் ஏன் தேர்வு செய்யப்படவில்லை என்று கவலை கொள்ள முடியாது. நான் ரோகித் சர்மாவின் இடத்தில் இருந்து பார்த்தால் தான் அணியில் என்ன தேவை எதை செய்ய வேண்டும் என்று என்னால் புரிந்து கொள்ள முடியும்.

நான் ரோகித் சர்மா இடத்தில் இருந்தால் வெற்றி பெறும் அணியை மாற்ற கடுமையாக யோசிப்பேன். ஒரு வேகப்பந்துவீச்சாளரை ரெஸ்ட் எடுக்க வைத்துவிட்டு மூன்று ஸ்பின்னர் வைத்து விளையாடுவது குறித்து அனைவருமே யோசிப்பார்கள். ரோகித் சர்மா எவ்வாறு யோசிக்கிறார் என்பதை நான் புரிந்து கொண்டேன். இறுதிப்போட்டியில் விளையாடுவது மிகவும் முக்கியம்.இதனால் எனக்கு வாய்ப்பு கிடைத்தால் என்ன செய்வது என்பது குறித்து மூன்று நாட்களுக்கு நான் தயாராக இருந்தேன்.

அதே சமயம் தமக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் நான் யோசித்தேன். அணி வீரர்களுக்கு நாம் உற்சாகம் கொடுக்க வேண்டும். வீரர்களுக்கு தண்ணீர் பாட்டில்களை எடுத்துக் கொடுக்க வேண்டும் என்பது குறித்தும் யோசித்தேன். இரண்டுக்குமே நான் மனதளவில் தயாராக இருந்தேன் என்று அஸ்வின் கூறியுள்ளார்.

Story first published: Friday, December 1, 2023, 10:30 [IST]
Other articles published on Dec 1, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+