Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸி. அணியில் அதிரடி மாற்றம் தேவை.. 2 முக்கிய வீரர்களை கொண்டு வாங்க. முன்னாள் வீரர்கள் கோரிக்கை

நாக்பூர் : இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

ஆஸ்திரேலிய அணியின் இந்த தோல்விக்கு முக்கிய காரணமாக அவர்களுடைய பேட்டிங் தான் என்று கூறப்படுகிறது.

முதலில் இன்னிங்ஸ் மற்றும் 177 ரன்கள் அடித்த ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிங்ஸில் 91 ரன்களில் சுருண்டது.இது இந்திய மண்ணில் ஆஸ்திரேலியா அடித்த மிக குறைந்தபட்ச ஸ்கோர் ஆகும்.

மாற்றம் தேவை

மாற்றம் தேவை

இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் செயல்பாடு குறித்து பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மார்க் வாக், ஆஸ்திரேலிய அணி தங்களது அணியை முற்றிலுமாக மாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், ஸ்டீவன் ஸ்மித், மார்னசை தவிர மற்ற வீரர்கள் யாரும் சிறப்பாக விளையாடவில்லை என தெரிவித்தார்.இனி வரும் போட்டிகளிலும் மற்ற ஆஸ்திரேலிய வீரர்கள் சுழற் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொள்வார்கள் என்ற நம்பிக்கை தமக்கு இல்லை என்று அவர் கூறியுள்ளார்.

2 பேர் வேண்டும்

2 பேர் வேண்டும்

இதனால் பல்வேறு வீரர்களை அணியை விட்டு நீக்கி புதிய வீரர்கள் அடுத்த டெஸ்ட் போட்டியில் விளையாட நடவடிக்கை எடுக்கப்படலாம் என அவர் கூறினார்.

குறிப்பாக கேமரான் கிரீன், டிராவல்ஸ் ஹெட் போன்ற வீரர்கள் விளையாட வேண்டும் என மார்க் வாக் கருத்து தெரிவித்துள்ளார்.மேலும் முதல் டெஸ்டில் அடைந்த தோல்வியை முற்றிலுமாக மறந்து விட்டு அடுத்த டெஸ்ட் போட்டிக்கு புதிதாக தயாராகும் படி அவர் அறிவுரை வழங்கியுள்ளார்.

திறமையை நம்புங்கள்

திறமையை நம்புங்கள்

இந்திய மண்ணில் அனைத்து அணிகளுமே தோல்வியை தழுவி வருவதால், ஏதோ பெரியதாக நாம் இழந்து விட்டோம் என்று நினைக்காமல் நம்பிக்கையுடன் சுற்பந்துவீச்சை எதிர்கொண்டு ரன் சேர்க்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். மேலும் டேவிட் வார்னர் ,உஸ்மான் கவாஜா போன்ற வீரர்கள் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் சேர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இதனை தொடர்ந்து பேசிய ஹைடன், ஆஸ்திரேலிய வீரர்கள் தங்களது திறமையை நம்பி சுழற் பந்துவீச்சை எதிர்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

ஹைடன் அறிவுரை

ஹைடன் அறிவுரை

அடுத்த பந்து என்ன வரும் என்று யோசிக்காமல் வருகின்ற பந்தை நன்றாக கவனித்து விளையாடினாலே இவ்வளவு பெரிய தோல்வியை தவிர்த்து இருக்கலாம் என்றும் அவர் கூறினார். அணியின் பேட்டிங் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாட் கம்மின்ஸ், எங்கள் அணி பேட்ஸ்மேன்கள் மூன்று பேர் நல்ல தொடக்கத்தை அளித்துவிட்டு உடனடியாக ஆட்டம் இழந்து விடுகிறார்கள். அவர்கள் பெரிய இன்னிங்ஸ் ஆடி கூடுதலாக ஒரு 100 ரன்கள் சேர்ந்தாலே இந்தியாவுக்கு நெருக்கடியை கொடுத்திருக்கலாம் என்று கூறியுள்ளார்.

Story first published: Saturday, February 11, 2023, 22:19 [IST]
Other articles published on Feb 11, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+