For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரிக்கிப் பாண்டிங்கின் உடல்நிலை தகவல்.. நெஞ்சுவலிக்கு பிறகு நடந்தது என்ன??.. ரசிகர்கள் பரபரப்பு!

பெர்த்: ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ரிக்கிப் பாண்டிங் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சூழலில் உடல்நிலை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வெற்றி பயணங்களில் மிக முக்கிய பங்கு வகித்தவர் முன்னாள் கேப்டன் ரிக்கிப்பாண்டிங். அந்த அணிக்கு 2 உலகக்கோப்பைகளை வென்றுக்கொடுத்த பெருமை அவருக்கு உண்டு.

கடந்த 2012ம் ஆண்டு அனைத்து வடிவ கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்த ரிக்கி பாண்டிங், அதன் பின்னர் வர்ணனையாளர் அவதாரம் எடுத்தார். தற்போது முக்கிய போட்டிகள் அனைத்திலும் பாண்டிங்கின் கமெண்ட்டேட்டரி இல்லாமல் இருக்காது.

சோக சம்பவம்

சோக சம்பவம்

இந்நிலையில் நேற்று கமெண்ட்டேட்டரி செய்துக்கொண்டிருந்த போது எதிர்பாராத சம்பவம் ஒன்று ஏற்பட்டது. ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் மோதி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியின் 3வது நாளான நேற்று ரிக்கிப் பாண்டிங் வர்ணனையாளராக செயல்பட்டு வந்தார். அப்போது திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு தடுமாறியுள்ளார்.

 உடல்நலக்குறைவு

உடல்நலக்குறைவு

உணவு இடைவேளையின் போது அவர் தடுமாறியதை பார்த்த பாதுகாப்பு அதிகாரிகள்,உடனடியாக அவரை ஆம்புலன்ஸ் மூலம் வேகமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டது. இதனால் அவருக்கு என்ன ஆகுமோ? ஏது ஆகுமோ? என கிரிக்கெட் ரசிகர்கள் பதற்றத்தில் ஆழ்ந்தனர்.

புதிய அப்டேட்

புதிய அப்டேட்

இந்நிலையில் அவரின் உடல்நிலை குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதில், ரிக்கிப் பாண்டிங்கிற்கு அளிக்கப்பட்ட முதற்கட்ட சிகிச்சையில் அவருக்கு பெரியளவிலான பாதிப்பு ஏற்படவில்லை எனக்கூறப்பட்டுள்ளது. இதனால் மாலை வரை கண்காணிப்பில் வைத்துவிட்டு, அவர் டிஸ்சார்ச் செய்யப்பட்டுள்ளார். இதுமட்டுமல்லாமல் ரசிகர்களுக்கு ஆச்சரியம் தரும் வகையில் மீண்டும் வர்ணனை செய்யவே வந்துவிட்டார்.

துரத்தும் நெஞ்சு வலி

துரத்தும் நெஞ்சு வலி

இந்தாண்டு ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்களை நெஞ்சு வலி என்பது விடாமல் துரத்தி வருகிறது. இந்தாண்டு மிகப்பெரிய ஜாம்பவான்களான ஷேன் வார்னே மற்றும் ராட் மார்ஷ் ஆகிய இருவரும் நெஞ்சு வலி காரணமாக துரதிஷ்டவசமாக உயிரிழந்தனர். டீன் ஜோன்ஸும் கடந்த செப்டம்பர் மாதம் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அட்டகாச ரெக்கார்ட்

அட்டகாச ரெக்கார்ட்

90களில் கிரிக்கெட் ஹீரோவாக வலம் வந்த ரிக்கிப் பாண்டிங் இதுவரை 168 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 13,378 ரன்களை அடித்துள்ளார். இதே போல 375 ஒருநாள் போட்டிகளில் 13,704 ரன்களும் விளாசியுள்ளார். இதில் 30 சதங்களும், 82 அரைசதங்களும் அடங்கும்.

Story first published: Saturday, December 3, 2022, 11:55 [IST]
Other articles published on Dec 3, 2022
English summary
Former Australian player Ricky Ponting New health update released, here is the full details of the report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+