Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக கோப்பை அணியிலிருந்து 2 ஸ்டார் வீரர்கள் நீக்கம்.. கோலிக்கு கூடுதல் பொறுப்பு.. ஸ்ரீகாந்த் தகவல்

மும்பை : 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெறும் நிலையில், இரண்டு முக்கிய வீரர்கள் இடம் பெற மாட்டார்கள் என முன்னாள் தேர்வு குழு உறுப்பினர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஸ்ரீகாந்த் 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற அணியை போல் புதிய அணியை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து பேசி அவர் இந்திய அணியில் தற்போது இஷான் கிஷன் தொடக்க வீரராக சிறப்பாக செயல்பட்டு வருவதாக கூறினார். இஷான் கிஷன் தொடர்ந்து அதிரடியாக விளையாட வேண்டும், அவரின் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த இந்திய அணி நிர்வாகம் அனுமதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

2 பேருக்கு இடமில்லை

2 பேருக்கு இடமில்லை

இஷான் கிஷன் போல் இன்னும் மூன்று வீரர்கள் பிளேயிங் லெவனில் அதிரடியாக ஆடினால் மட்டுமே ஒரு நாள் உலகக் கோப்பையில் இந்திய அணி பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.இதேபோன்று பந்துவீச்சு ஆல் ரவுண்டர்கள், பேட்டிங் ஆல் ரவுண்டர்கள் என குறைந்தபட்சம் மூன்று வீரர்கள் ஆவது இருக்க வேண்டும். என்னுடைய அணி என்பது மிகவும் சிம்பிள்.என்னுடைய அணியில் சுப்மான் கில் .ஷர்துல் தாக்கூர் என இருவருக்குமே இடம் இருக்காது.

தொடக்க ஜோடி

தொடக்க ஜோடி

இதை நான் ஒரு ரசிகனாக சொல்லவில்லை. தேர்வு குழு தலைவராக இருந்த அனுபவத்தில் கூறுகிறேன். ரோகித் சர்மா ஓய்வில் இருக்கும் பட்சத்தில் தான் சுப்மான் கில், ஒருநாள் அணியில் இடம் பெறுவார். ரோகித் சர்மா வந்த பிறகு அவருக்கு பிளேயிங் லெவனில் இடம் இருக்காது. வங்கதேசத்திற்கு எதிரான ஒரு நாள் அணியில் கூட கில் இடம்பெறவில்லை. தற்போது ஷிகர் தவான் அணியில் இல்லாத காரணத்தால் தான் இலங்கைத் தொடரில் சுப்மான் கில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

போட்டியை வெல்ல கூடியவர்கள்

போட்டியை வெல்ல கூடியவர்கள்

என்னை பொறுத்தவரை இஷாந்த் கிஷன், ரோகித் சர்மா தொடக்க வீரராக இருக்க வேண்டும். இதேபோன்று நான் தேர்வு செய்யும் அணியில் பும்ரா, உம்ரான் மாலிக், ஆர்ஸ்தீப் சிங், முகம்மது சிராஜ் என நான்கு வேக பந்துவீச்சாளர்கள் இருப்பார்கள். இந்த நான்கு பேரே போதுமானது. முகமது சமியை வேண்டுமானால் கூடுதலாக சேர்த்துக் கொள்ளலாம். இதே போன்று சுழற்பந்து வீசும் பேட்ஸ்மேன் தீபக் ஹூடாவை அணியில் கொண்டு வருவேன்.

இது போன்ற வீரர்கள் தான் போட்டியை வென்று தருவார்கள். உங்களுக்கு போட்டியை வெல்ல வேண்டும் அதற்கு யூசுப் பதான் போன்று தனி ஆளாக நின்று போட்டியை வெல்லக்கூடிய குதிரைகளை நீங்கள் களம் இறக்க வேண்டும்.

எதிர்பார்க்க வேண்டாம்

எதிர்பார்க்க வேண்டாம்

இதேபோன்று நான் மேலே சொன்ன அனைவரும் தொடர்ந்து இந்திய அணிக்கு வெற்றியை பெற்று தர வேண்டும் என நீங்கள் எதிர்பார்க்காதீர்கள். பத்து போட்டிகளில் மூன்றில் அவர்கள் வென்றாலே போதுமானது. ரிஷப் பண்ட் போன்ற வீரர் தொடர்ந்து தனியே நின்று அணியை காப்பாற்ற வேண்டும் என நினைக்காதீர்கள்.நான் மேலே சொன்ன வீரர்கள் ஏதேனும் ஒரு போட்டியை தனியாக நின்று வென்று கொடுத்தாலே போதும். அதை ரிஷப் பண்ட் செய்வார். விராட் கோலிக்கு நீங்கள் கூடுதல் பொறுப்பை வழங்க வேண்டும்.

ஸ்ரீகாந்த் நம்பிக்கை

ஸ்ரீகாந்த் நம்பிக்கை

2011 உலக கோப்பையை இந்தியா வென்றதுக்கு முக்கிய காரணம் கௌதம் கம்பீர். அவர் களத்தில் நின்று 50 ஓவர் முழுமையாக விளையாடினார். அதேபோல் விராட் கோலி செயல்பட வேண்டும். விராட் கோலி களத்தில் நின்று போட்டியை முழுமையாக விளையாடினால் எதிரில் இருக்கும் வீரர்கள் எந்த நெருக்கடியும் இன்றி அதிரடியாக விளையாடுவார்கள். இதை நீங்கள் வங்கதேசத்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியிலே பார்த்திருக்கலாம். இந்த மாற்றங்களில் எல்லாம் செய்தால் நிச்சயம் உலக கோப்பையை வெல்லலாம் என்று ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.

Story first published: Saturday, January 7, 2023, 16:11 [IST]
Other articles published on Jan 7, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+