Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

1983 உலகக்கோப்பையின் நட்சத்திர வீரர்.. யஷ்பால் சர்மா திடீர் மரணம்.. சோகத்தில் இந்திய ரசிகர்கள்!

இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரர், யஷ்பால் சர்மா மாரடைப்பு காரணமாக திடீரென மரணமடைந்துள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

1983 Worldcup Hero Yashpal Sharma திடீர் மரணம்! | Yashpal Sharma Biography in Tamil | OneIndia Tamil

கபில்தேவ் தலைமையில் 1983 உலகக்கோப்பையை இந்திய அணி வென்ற போது அந்த அணியின் முக்கியமான வீரராக யஷ்பால் சர்மா இடம்பெற்றிருந்தார்.

66 வயதாகும் யஷ்பால் சர்மாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இவருக்கு ரேணு என்கிற மனைவியும் பூஜா, ப்ரீத்தி என இரண்டு மகள்களும், சிராக் சர்மா என்கிற மகனும் உள்ளனர்.

அறிமுகம்

அறிமுகம்

பஞ்சாப் மாநிலத்தின் லூதியானாவில் 1954ஆம் ஆண்டு பிறந்தவர் யஷ்பால் ஷர்மா. இவர் கடந்த 1978ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டியில் தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தை தொடங்கினார். பின்னர் 1979ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக, முதல் டெஸ்ட் போட்டியில் ஆடினார்.

உலகக்கோப்பை தொடர்

உலகக்கோப்பை தொடர்

இந்திய அணியில் மிடில் ஆர்டரில் முக்கிய வீரராக திகழ்ந்த அவர், கடந்த 1983இல் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியவர். அந்த தொடரின் முதல் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை இந்தியா எதிர்கொண்டது. அதில் யஷ்பால் அடித்த 89 ரன்கள் இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டு தொடரில் நல்ல தொடக்கத்தை கொடுத்தது.

சேப்பாக்கம்

சேப்பாக்கம்

யஷ்பால் ஷர்மாவின் கிரிக்கெட் வாழ்வில் சென்னை சேப்பாக்கம் மைதானம் முக்கிய பங்காற்றியது. கடந்த 1982ஆம் ஆண்டு சென்னையில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் யஷ்பாலும், குண்டப்பா விஸ்வநாத்தும் இணைந்து அடித்த 326 ரன்கள் இன்றும் சிறந்த பார்ட்னர்ஷிப்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. அந்த போட்டியில் யஷ்பால் அடித்த 140 ரன்கள் இந்தியாவுக்கு பெரும் உதவியாக இருந்தது.

ஓய்வுக்கு பிறகு

ஓய்வுக்கு பிறகு

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் யஷ்பால் சர்மா சிறிது காலம் கள நடுவராகவும், அதன்பின் இந்திய கிரிக்கெட் அணியின் தேசியத் தேர்வாளராகவும் இருந்தார். 2011ம் ஆண்டு உலகக்கோப்பையின் போது இந்திய அணியில் தேர்வாளர்களில் ஒருவராக இருந்தார். அதன்பின்னர் மனைவி ரேணு சர்மாவுடன் வாழ்ந்து வந்தார். இந்தத் தம்பதிக்கு பூஜா, ப்ரீத்தி என இரண்டு மகள்களும், சிராக் சர்மா என்கிற ஒரு மகனும் உள்ளனர். அவரின் மறைவுக்கு கிரிக்கெட் உலகை சேர்ந்த பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Story first published: Tuesday, July 13, 2021, 15:07 [IST]
Other articles published on Jul 13, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+