Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கங்குலியை காப்பாற்ற களமிறங்கும் முன்னாள் வீரர்கள்..!! கோலி மீது திட்டமிட்டு பழிசுமத்தப்படுகிறதா?

சென்னை: இந்திய ஒருநாள் அணி கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி நீக்கப்பட்டதில் இருந்தே சர்ச்சைகளும், விவாதங்களும் தொடங்கிவிட்டன.,

கேப்டன் பதவியை விட்டு விராட் கோலியை நீக்கிய விதம் சரியல்ல என்று புகார் எழுந்துள்ள நிலையில், இந்த பிரச்சினைக்கு எல்லாம் விராட் கோலி தான் காரணம் என்பது போல் தோற்றம் உருவாக்கப்படுகிறது.

குறிப்பாக, கங்குலியை காப்பாற்ற முன்னாள் வீரர்கள் அனைவரும் ஒன்றிணைந்து விராட் கோலி தான் அனைத்து பிரச்சினைக்கும் மூலக் காரணம் என்பது போல் அறிவுரை கூறி வருகின்றனர்.

கபில்தேவ்

கபில்தேவ்

விராட் கோலி சர்ச்சை பெரியதாக மாற, களத்தில் குதித்து முன்னாள் கேப்டன் கபில்தேவ், அணி தான் முக்கியம் என்றும் ஒருவரை ஒருவர் பொது வெளியில் குற்றம்சாட்டுவது சரி அல்ல என்றும், பி.சி.சி.ஐ. தலைவர் என்ற பொறுப்புக்கு மரியாதை தர வேண்டும் என்றும் விராட் கோலிக்கு அறிவுரை கூறி இருந்தார்.

ரோகன் கவாஸ்கர்

ரோகன் கவாஸ்கர்

இதே போன்று கவாஸ்கரின் மகனான ரோகன் கவாஸ்கரும், ஒரு அணி என்பது நட்பு, சகோரத்துவத்தை உருவாக்கும் என்றும் கபில்தேவ், கவாஸ்கரின் நட்பு பல ஆண்டுகளாக தொடர்வதாகவும் சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை போட்டு இருந்தார்.

வி.வி.எஸ் லட்சுமணன்

வி.வி.எஸ் லட்சுமணன்

தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரர் வி.வி.எஸ். லட்சுமணன் சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் எப்போதும் உணர்ச்சி வசப்பட கூடாது என்றும், உணர்ச்சி வசப்பட்டால் அது நம்மையே அழித்துவிடும் என்றும் கோலிக்கு மறைமுகமாக அறிவுரை கூறியிருந்தார்.

Recommended Video

Virat Kohli எப்பவும் அப்படி நினைச்சது கிடையாது.. சிறுவயது பயிற்சியாளர்
ரசிகர்கள் கவலை

ரசிகர்கள் கவலை

ஏற்கனவே கங்குலியும், விராட் கோலி அனைவரிடமும் சண்டை போடுவார் என்று வெளிப்படையாக கூறியிருந்தார். இதனால் முன்னாள் வீரர்கள் அனைவருமே இணைந்து அனைத்து பிரச்சினைக்கும் காரணம் விராட் கோலி தான் என்பதை போல், வரிசையாக அறிவுரை கூறுவதாக கோலி ரசிகர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Story first published: Tuesday, December 21, 2021, 19:50 [IST]
Other articles published on Dec 21, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+