Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“பணத்திற்காக பயப்படும் பிசிசிஐ”.. விராட் கோலிக்கு பிசிசிஐ கருணை காட்டுவது ஏன்? மாண்டி பனேசர் பளீச்

மும்பை: இந்திய அணியில் இருந்து விராட் கோலி ஒதுக்கப்படாமல் இருப்பதற்கான காரணமாக இங்கிலாந்து முன்னாள் வீரர் சர்ச்சை கருத்தை கூறியுள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்த போட்டியில் விராட் கோலி 16 ரன்களுக்கு வெளியேறியதால், மீண்டும் அவரின் ஃபார்ம் குறித்த பேச்சு அதிகரித்துள்ளது.

விராட் கோலி ஃபார்ம்

விராட் கோலி ஃபார்ம்

கடந்த 2019ம் ஆண்டு முதல் ஒரு சதம் கூட அடிக்காமல் உள்ள விராட் கோலி, தொடர்ச்சியாக சொற்ப ரன்களுக்கு அவுட்டாகி வருகிறார். கடந்த 13 இன்னிங்ஸ்களில் ஒரே ஒரு அரைசதத்தை மட்டுமே கோலி அடித்துள்ளார். இதனால் அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

பிசிசிஐ நடவடிக்கை

பிசிசிஐ நடவடிக்கை

ஆனால் பிசிசிஐ அவரை நீக்குவதற்கு பதிலாக ஓய்வு கொடுத்து மீண்டும் அணியில் சேர்த்து வருகிறது. கடந்த காலங்களில் நிறைய சதங்கள் மற்றும் நிறைய வெற்றிகளை இந்திய அணிக்காக கோலி கொடுத்துள்ளதால், அவர் மீது நம்பிக்கை வைத்து பிசிசிஅ வாய்ப்பு தருவதாக விளக்கம் அளிக்கப்படுகிறது.

பனேசரின் விளக்கம்

பனேசரின் விளக்கம்

இந்நிலையில் முன்னாள் வீரர் மாண்டி பனேசர் புதிய காரணத்தை கூறியுள்ளார். அதில், கிறிஸ்டினோ ரொனால்டோவை போன்று தான் விராட் கோலியும். ரொனால்டோ எப்போதெல்லாம் மேன்செஸ்டர் அணிக்காக ஆடுகிறாரோ, அப்போதெல்லாம் அனைவரும் கால்பந்தை காண்பார்கள். அதே போல கோலிக்கும் அதிகப்படியான ரசிகர்கள் மற்றும் ஈர்ப்புகள் உள்ளன.

வேறு வழி இல்லை

வேறு வழி இல்லை

போட்டியின் முடிவு எப்படி வந்தாலும் சரி, கோலி கண்டிப்பாக ஆடினால் தான் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைவார்கள் என்பதால் பிசிசிஐ அழுத்தத்தில் உள்ளது. அவரை அணியில் இருந்து நீக்கினால் மிகப்பெரிய வருமான இழப்பை பிசிசிஐ சந்திக்கும் எனவே இதற்காக தான் கோலியை வேறு வழியின்றி சேர்க்கின்றனர்.

பிசிசிஐ எடுக்கும் ரிஸ்க்

பிசிசிஐ எடுக்கும் ரிஸ்க்

விராட் கோலி விளையாடுவதால், அவரை வீழ்த்தி மற்ற கிரிக்கெட் வாரியங்கள் நன்றாக சம்பாதிக்கின்றனர். ஆனால் பிசிசிஐ-ன் நிலைமை தான் தெரியவில்லை. வருமானத்திற்காக இனி பிசிசிஐ பார்த்தால், டி20 உலகக்கோப்பை, 50 ஓவர் உலகக்கோப்பையில் ரிஸ்க் எடுக்கப்போகிறதா என்பது தான் கேள்விக்குறியாக உள்ளது.

Story first published: Friday, July 15, 2022, 15:52 [IST]
Other articles published on Jul 15, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+