
வெஸ்ட் இண்டீஸ் டூர்
கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக மோசமான ஃபார்மில் இருந்து வரும் விராட் கோலிக்கு அவ்வபோது ஓய்வுகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் அவர் சொதப்பிக்கொண்டே தான் இருக்கிறார். இங்கிலாந்துடனான டி20 தொடரில் ஏமாற்றிய அவர், ஒருநாள் போட்டியிலும் 16 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றினார்.

பனேசரின் ஐடியா
இந்நிலையில் கோலியை மீண்டும் ஃபார்முக்கு வர இங்கிலாந்து முன்னாள் வீரர் மாண்டி பனேசர் ஐடியா கூறியுள்ளார். அதில், கோலியை மீட்டுக்கொண்டுவதற்கு சச்சின் டெண்டுல்கர் மற்றும் யுவராஜ் சிங் ஆகியோரால் மட்டுமே முடியும். ஓய்வு நேரத்தை கோலி அவர்களுடன் செலவழிக்க முயற்சி செய்ய வேண்டும்.

என்ன காரணம்
சச்சினை தனது குருவாக மதிக்கக்கூடியவர் விராட் கோலி. அவருடன் அமர்ந்து ஆலோசனை மேற்கொள்ள வேண்டும். பயிற்சியின் போது கோலியுடன் சச்சின் இருந்தால் பெரும் மாற்றத்தை கொடுக்கும். இதே போல கோலியின் நெருங்கிய நண்பராக யுவ்ராஜ் சிங் இருக்கிறார். பெரிய இடைவெளிக்கு பின்பு யுவ்ராஜ் கம்பேக் தந்துள்ளார். எனவே அவருடன் ஆலோசனை நடத்தி கோலியும் வர முடியும் என மாண்டி பனேசர் கூறியுள்ளார்.

ஹர்த்திக்கின் ஸ்டைல்
ஃபார்ம் அவுட்டில் இருந்த ஹர்திக் பாண்ட்யா, நீண்ட காலமாக ஓய்வு எடுத்துக்கொண்டு பயிற்சி பெற்றார். அதன் விளைவாக தற்போது நல்ல ஃபார்மில் விளையாடி வருகிறார். இதே போன்று விராட் கோலியும் தனது விருப்பத்திற்கு ஏற்ப பயிற்சி பெற்று ஃபார்முக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











