Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விராட் கோலியை வைத்து இப்படி ஒரு ஏற்பாடா??.. ரவி சாஸ்திரி தந்த பலே ஐடியா.. சிந்திக்கும் டிராவிட்!!

துபாய்: இந்திய அணியில் இனி விராட் கோலி என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ரவி சாஸ்திரி முக்கிய அறிவுரையை கொடுத்துள்ளார்.

ஆசிய கோப்பை தொடரில் தொடர்ச்சியாக தோல்வியடைந்ததால் இந்திய அணி நாக் அவுட்டாகி வெளியேறியது.

இந்த தொடரில் இந்திய ரசிகர்களுக்கு கிடைத்த ஒரே மகிழ்ச்சியான செய்தி விராட் கோலியின் கம்பேக் தான் .

கோலியின் சதம்

கோலியின் சதம்

ஆஃப்கானிஸ்தான் அணியுடனான போட்டியில் 61 பந்துகளை சந்தித்த விராட் கோலி 122 ரன்களை விளாசினார். இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு கோலி சதமடித்ததை பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்ததனர். ஆனால் இந்த சதத்தை விராட் கோலி, தனக்கே உரிய 3வது இடத்தில் களமிறங்கி அடிக்கவில்லை. கேப்டன் ரோகித் சர்மா இல்லாததால் ஓப்பனிங்கில் களமிறங்கி ரன் குவித்தார்.

ரவிசாஸ்திரியின் யோசனை

ரவிசாஸ்திரியின் யோசனை

இந்நிலையில் விராட் கோலியின் இந்த கம்பேக்கை வைத்து முன்னாள் வீரர் ரவிசாஸ்திரி அட்டகாச ஐடியா ஒன்றை கொடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், விராட் கோலி தற்போது அடித்துள்ள சதம், இனி இந்தியாவுக்கு 3வது ஓப்பனர் தேவையா? என்ற குழப்பத்தை இந்திய தேர்வுக்குழு அதிகாரிகளுக்கு ஏற்படுத்தியிருக்கும்.

காரணம் என்ன

காரணம் என்ன

இந்திய அணியில் ஓப்பனிங்கிற்கு ரோகித் மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் உள்ளனர். 3வதாக ஒரு ஓப்பனரை தேர்வு செய்வதற்கு பதிலாக கோலியை வைத்துக்கொண்டால், இனி கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் அல்லது வேகப்பந்துவீச்சாளரை அணிக்குள் கொண்டு வர முடியும். இது வரவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியாவுக்கு பெரும் பலமாக இருக்கக்கூடும் என சாஸ்திரி கூறியுள்ளார்.

ரோகித் யோசிப்பாரா?

ரோகித் யோசிப்பாரா?

விராட் கோலியை நன்கு புரிந்து வைத்துள்ளவர் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி. கோலிக்கு நீண்ட ஓய்வு இருந்தால் நிச்சயம் கம்பேக் கொடுப்பார் என முதலில் அறிவுறுத்தியவர் அவர் தான். அவர் கூறியதை போன்றே நிகழ்ந்துள்ளது. எனவே தற்போது கூறியதை போன்றே கோலியை ஓப்பனராக பயன்படுத்துவார்களா? என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Story first published: Friday, September 9, 2022, 20:53 [IST]
Other articles published on Sep 9, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+