Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“நீங்கெல்லாம் நரகத்திற்கு தான் போவீங்க” ஆசியகோப்பை பிரச்சினை.. இந்தியாவை விளாசிய பாக்.முன்னாள் கேப்டன்

லாகூர்: ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியின் நிலைபாடு சர்ச்சையை ஏற்படுத்தி வரும் சூழலில் பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் ஜாவெட் மியன்டாட் கடுமையான வார்த்தைகள் மூலம் விமர்சித்துள்ளார்.

2023ம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் தான் நடைபெறுவதாக இருந்தது. இதற்கான உரிமையை பெற்றிருந்த அந்த நாடு அதற்கான ஏற்பாடுகளிலும் தீவிரம் காட்டியது.

2006ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி, பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டதே கிடையாது. இதனால் இந்த மோதலை காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

பெரும் பிரச்சினை

பெரும் பிரச்சினை

ஆனால் அதற்கு ஆப்பு வைத்தார் பிசிசிஐ செயலாளரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான ஜெய் ஷா. பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செல்ல இந்திய அணிக்கு மத்திய அரசு அனுமதி கொடுக்காததால் ஆசிய கோப்பையை பாகிஸ்தானில் இருந்து வேறு நாட்டிற்கு கொண்டு செல்லவுள்ளதாக அறிவித்தார். இது பாகிஸ்தான் வாரியத்திற்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதற்கு மற்ற ஆசிய நாடுகளும் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.

அடுத்த கூட்டம்

அடுத்த கூட்டம்

ஆனால் பாகிஸ்தான் வாரியம் இந்த விவகாரத்தில் பின் வாங்குவதாக இல்லை. நேற்று ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் ஜெய் ஷா மற்றும் பாகிஸ்தான் வாரிய தலைவர் நஜம் சேதி ஆகியோர் இடையே காரசார விவாதம் நடந்துள்ளது. எக்காரணத்தை கொண்டும் பாகிஸ்தானுக்கு இந்தியா செல்லாது என ஜெய் ஷா விடாப்பிடியாக கூறிவிட்டார். பாகிஸ்தானும் விடாப்பிடியாக உள்ளதால் மீண்டும் மார்ச் மாதம் கூட்டம் நடைபெறும் எனக்கூறப்பட்டுள்ளது.

ஜாவெட் விளாசல்

ஜாவெட் விளாசல்

இந்நிலையில் இந்த விவகாரத்தில் பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் ஜாவெட் மியன்டாட் தலையிட்டுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், பாகிஸ்தான் மண்ணில் விளையாடுவதற்கு இந்தியா ஏன் இவ்வளவு பயப்படுகிறது? பாகிஸ்தானிடம் தோற்றால் இந்திய ரசிகர்கள் எளிதில் விட்டுவிட மாட்டார்கள் என்பது பிசிசிஐ-க்கு தெரியும். அதனால் தான் இப்படி பயப்படுகிறார்கள்.

நரகத்திற்கு செல்லட்டும்

நரகத்திற்கு செல்லட்டும்

பாகிஸ்தானுக்கு இந்திய அணி வரவில்லை என்றால் நரகத்திற்கு தான் அவர்கள் செல்வார்கள். உரிமைக்காக நிச்சயம் குரல் கொடுத்தே தீர வேண்டும். எதற்காகவும் நாங்கள் பயப்பட மாட்டோம். இந்தியாவை நம்பி நாங்கள் இல்லை. எங்களிடம் போட்டியை நடத்தும் உரிமை உள்ளது. இந்த விவகாரத்தில் ஐசிசி தலையிட்டே தீர வேண்டும். அனைத்து வாரியங்களையும் கட்டுப்படுத்துவதற்கு தான் ஐசிசி உள்ளது.

இந்தியாவை நீக்குங்கள்

இந்தியாவை நீக்குங்கள்

ஐசிசியால் அங்கீகரிக்கப்பட்ட இடங்களுக்கு அனைத்து அணிகளும் சென்று விளையாட வேண்டும். அனைவருக்கும் ஒரே மாதிரியான விதிமுறைகள் தான். ஆனால் இந்தியா இதுபோன்று வரமுடியாது எனக் கூறிக்கொண்டு இருந்தால் இந்தியாவை கவுன்சிலில் இருந்து நீக்கிவிட வேண்டும், அவர்கள் தேவையே இல்லை என ஆக்ரோஷமாக கூறியுள்ளார்.

Story first published: Monday, February 6, 2023, 16:37 [IST]
Other articles published on Feb 6, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+