டி20 உலகக்கோப்பை அணியில் டி.நடராஜன்.. ஆஸ்திரேலிய களத்தில் பெரிய பலம்.. பாக்.சீனியர் கூறிய ஐடியா!
மும்பை: இந்திய அணியில் டி.நடராஜனை சேர்ப்பதற்காக பாகிஸ்தானின் முன்னாள் வீரர் தானிஷ் கனேரியா ஆதரவுக்குரல் கொடுத்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் மாதத்தில் நடைபெறவிருக்கிறது.
இந்த தொடருக்கான அணியை உருவாக்குவதற்காக தான் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் திட்டமிட்டு வருகின்றனர்.

இந்திய அணி
அதாவது உலகக்கோப்பை தொடருக்காக அவர்கள் இருவரும் 20 வீரர்கள் வரை தேர்வு செய்து வைத்துள்ளதாகவும், இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் என தொடர்ச்சியாக அந்த வீரர்களுக்கு மட்டும் வாய்ப்பு கொடுக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. குறிப்பாக அடுத்த மாதம் வரவுள்ள ஆசியக்கோப்பை தொடரில் இந்தியா அணியை தெளிவாக பார்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாக்.சீனியர் பேச்சு
இந்நிலையில் இந்திய அணியில் தமிழக வீரர் டி.நடராஜன் பெரிய சொத்தாக இருப்பார் என தானிஷ் கனேரியா கூறியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், இந்திய அணியில் டி.நடராஜன் மீண்டும் விளையாடுவதை நான் பார்க்க ஆசைப்படுகிறேன். ஆஸ்திரேலியாவில் அவர் ஏற்படுத்திய தாக்கத்தை அவரால் எப்போதும் செய்ய முடியும். மிகச்சிறந்த வீரர் அவர்.

பிசிசிஐ யோசிக்கனும்
இந்திய அணிக்கு தற்போது அட்டகாசமான பவுலிங் படை உள்ளது. நிறைய திறமையான வீரர்கள் வந்து போட்டி கடுமையாக உள்ளது. எனவே அணி நிர்வாகம் எப்படி அந்த வீரர்களின் திறமைகளை சுழற்சி முறையில் பயன்படுத்தலாம் என யோசிக்க வேண்டும் என கனேரியா கூறியுள்ளார்.
Recommended Video

நட்டு-வின் ஸ்பெஷல்
ஆஸ்திரேலிய களத்தில் அறிமுகமான டி.நடராஜன், 3 வடிவ கிரிக்கெட்டிலும் அசத்தினார். டி20 உலகக்கோப்பையும் ஆஸ்திரேலியாவில் தான் நடைபெறுவதால், மீண்டும் நடராஜனை கொண்டு வந்தால் இந்தியாவுக்கு பெரும் பலமாக அமையும். எனினும் தற்போதைய திட்டத்தில் அவரை பிசிசிஐ கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை என்று தான் தெரிகிறது.


Click it and Unblock the Notifications