
இந்திய அணி
இதற்காக அணியில் முக்கிய மாற்றமாக விராட் கோலி - ரவிசாஸ்திரி இடங்களுக்கு ரோகித் சர்மா - ராகுல் டிராவிட் வந்துள்ளனர். உலகக்கோப்பை தொடருக்கான வீரர்களை ஏற்கனவே யோசித்து வைத்துள்ள இவர்கள், தொடர்ச்சியாக அவர்களை பயன்படுத்தி சரியான ப்ளேயிங் 11-ஐ உருவாக்க முயற்சித்து வருகின்றனர்.

பாக். சீனியரின் பாராட்டு
இந்நிலையில் ப்ளேயிங் 11ல் இளம் வீரர் அர்ஷ்தீப் சிங்-ஆல் இந்தியாவுக்கு பெரிய பலம் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் தனிஷ் கனேரியா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், என் வார்த்தைகளை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். வெஸ்ட் இண்டீஸுடனான 3வது போட்டியில் அர்ஷ்தீப் சிங் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார். அர்ஷ்தீப் எப்படி விக்கெட் எடுக்க வேண்டும் என்ற கலையை அறிந்தவர். ஒவ்வொரு பந்திலும் மூளையை பயன்படுத்தி திட்டமிடுகிறார்.

கண்டிப்பாக தேவை
எனவே ஆசியக்கோப்பை மற்றும் டி20 உலகக்கோப்பை தொடர்களில் நிச்சயம் அவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார். ஆசியக்கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவிருக்கிறது. எனவே அங்கு அர்ஷ்தீப் போன்ற இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள் இருந்தால் பெரிய பலம். இதனை இந்திய அணி யோசிக்கும் என அவர் கூறியுள்ளார்.
Recommended Video

பவுலிங் விவரம்
இங்கிலாந்துடனான டி20 போட்டியில் அறிமுகமான அர்ஷ்தீப் 3.3 ஓவர்கள் வீசி 2/28 என சிறப்பாக செயல்பட்டார். இதில் ஒரு ஓவர் மெய்டன் ஆகும். வெஸ்ட் இண்டீஸுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இடம்பெற்றுள்ள அவர், இன்னும் ப்ளேயிங் 11ல் சேர்க்கப்படவில்லை. எனவே 3வது போட்டியில் அவர் விளையாடுவர் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











