Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“அந்த 4 பேர் கன்பார்ம்”.. முதல் டெஸ்டுக்கான இந்திய ப்ளேயிங் 11.. அடித்துக்கூறும் முன்னாள் வீரர்!

சென்னை: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய ப்ளேயிங் 11-ஐ தேர்வு செய்வதில் அதிக குழப்பம் நீடித்து வருகிறது.

இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வரும் டிசம்பர் 26ம் தேதியன்று தொடங்கவுள்ளது.

இந்த முறை எப்படியும் தென்னாப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றிவிட வேண்டும் என இந்திய அணி முணைப்பு காட்டி வருகிறது. இதனால் ப்ளேயிங் 11-ஐ தேர்வு செய்வதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது.

பேட்டிங்

பேட்டிங்

இந்திய அணியின் ஓப்பனிங்கை பொறுத்தவரையில் மயங்க் அகர்வால் மற்றும் கே.எல்.ராகுல் ஜோடி களமிறங்குகின்றனர். ரோகித் சர்மா விலகியுள்ளதால் இவர்கள் இருவர் உறுதி செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாக கோலி, ரிஷப் பண்ட் ஆகியோர் முதன்மை தேர்வாக உள்ளனர். ஆனால் புஜாரா, ரகானே ஆகியோருக்கு பதிலாக தான் ஹனுமா விஹாரி, ஸ்ரேயாஸ் ஐயர் போட்டிப்போட்டு வருகின்றனர்.

பந்துவீச்சு திட்டம்

பந்துவீச்சு திட்டம்

இதே போல பவுலிங்கில் இந்திய அணியின் வழக்கமான திட்டமான 3 வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் 2 ஸ்பின்னர்கள் ஃபார்முலாவை கைவிடவுள்ளது. இங்கு நிச்சயம் 4 வேகப்பந்துவீச்சாளர்களாவது தேவைப்படுவார்கள். ஏனென்றால் தென்னாப்பிரிக்க களத்தில் வேகப்பந்துவீச்சுக்கு தான் அதிகம் சாதகமாக இருக்கும்.

பிரசாத் பதில்

பிரசாத் பதில்

இந்நிலையில் இந்திய பவுலிங் எப்படி இருக்கும் என்பது குறித்து முன்னாள் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் பேசியுள்ளார். அதில், இந்திய அணி 5 பவுலர்களை கொண்டு களமிறங்கினால் ஷர்துல் தாக்கூர் சிறந்த தேர்வாக இருப்பார். ஏனென்றால் ஷர்துல் பேட்டிங்கிலும், பயன்படுவார். இதே போல ரவிச்சந்திரன் அஸ்வினும் பேட்டிங்கில் நன்கு உதவக்கூடியவர்.

அந்த 4 பவுலர்கள்

அந்த 4 பவுலர்கள்

தற்போதைக்கு, 4 பவுலர்கள் கண்டிப்பாக விளையாடுவார்கள் என்பது என்னால் கூற முடியும். ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, அஸ்வின் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் தான் அது. இஷாந்த் சர்மாவின் தற்போதைய ஃபார்ம் மோசமாக உள்ளதால், அவருக்கு மாற்றாக நிச்சயம் முகமது சிராஜ் தான் களமிறங்குவார்.

Story first published: Wednesday, December 22, 2021, 19:20 [IST]
Other articles published on Dec 22, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+