Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இங்கிலாந்துக்கு திருப்பி கொடுத்த பாகிஸ்தான்.. அறிமுக வீரர் 7 விக்கெட் வீழ்த்தி அசத்தல்.. செம போட்டி

முல்தான் : இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் அபாரமாக செயல்பட்டு, அசத்தி இருக்கிறார்கள்.

முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி அபாரமாக விளையாடி, பாகிஸ்தானை தோற்கடித்து. டி20 போட்டியில் ஆடுவது போல், டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் 506 ரன்கள் குவித்து சாதனை படைத்தனர்.

இந்த நிலையில், 2வது டெஸ்ட் போட்டியிலும் ரன்குவித்து, இங்கிலாந்து வீரர்கள் அதிரடியாக விளையாட முயற்சித்தனர். ஆனால், எல்லா நேரமும்,இந்த யுத்தி கைக் கொடுக்காது என்று இன்று தெரிய வந்தது.

அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஷாக் கிராலி, பென் டக்கட் ஆகியோர் அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். எனினும் ஷாக் கிராலி 19 ரன்களில் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய பென் டக்கட், 49 பந்துகளில் 63 ரன்களை விளாசிய நிலையில், அப்ரர் அகமது பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார்.

சரிந்த விக்கெட்

சரிந்த விக்கெட்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜோ ரூட், அப்ரர் அகமது பந்தை எதிர்கொள்ள முடியாமல் 8 ரன்களில் எல்பிடபியூள் ஆக, ஹரி புருக் ரன்களில் நடையை கட்டினார். மறுமுனையில் ஹாரி போப், ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடியது போல் 61 பந்துகளில் 60 ரன்கள் சேர்த்த நிலையில், ஆட்டமிழந்தார். இதனால், இங்கிலாந்து அணி மதிய நேர இடைவேளையின் போது 180 ரன்களை எடுத்து 5 விக்கெட்டுகளை இழந்தது.

அபார பந்துவீச்சு

அபார பந்துவீச்சு

இதன் மூலம் டெஸ்ட் போட்டியின் முதல் நாளின் முதல் செஷனில் அதிக ரன்கள் அடித்த அணி என்ற பெருமையை இங்கிலாந்து படைத்தது. எனினும் 5 முக்கிய விக்கெட்டுகளை அந்த அணி இழந்தது பின்னடைவாக மாறியது. இருப்பினும்இங்கிலாந்து வீரர்கள் அதிரடியை காட்டுகிறேன் என்ற பெயரில் கொத்தாக விக்கெட்டுகளை இழக்க தொடங்கினர். இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 281 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

பாபர் அசாம் அரைசதம்

பாபர் அசாம் அரைசதம்

அறிமுக போட்டியில் களமிறங்கிய சுழற்பந்துவீச்சாளர் அப்ரர் அகமது 7 விக்கெட்டுகளை வீழ்த்தி, அறிமுக டெஸ்ட் இன்னிங்சில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய 3வது வீரர் என்ற பெருமையை அப்ரர் அகமது பெற்றார். இதனையடுத்து பாகிஸ்தான் அணியில் அப்துல்லா ஷபிக் 14 ரன்களிலும், இமார் உல் ஹக் டக் அவுட்டாகியும் வெளியேற, கேப்டன் பாபர் அசாம் 61 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 107 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும் இழந்தது.

Story first published: Friday, December 9, 2022, 19:06 [IST]
Other articles published on Dec 9, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+