Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விராட் கோஹ்லி ஒருநாள் சிக்கலில் சிக்குவார்.. வாட்சன் வயிற்றெரிச்சல் பேச்சு

அடிலெய்டு: விராட் கோஹ்லி உணர்ச்சிவசப்படுவது அவரை ஒருநாள் இக்கட்டில் சிக்க வைத்துவிடும் என்று ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வாட்சன் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியா-ஆஸ்திரேலியா நடுவேயான முதலாவது டி20 போட்டி அடிலெய்டில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் மைக்ரோ போனில் பேசியபடி பேட் செய்துகொண்டிருந்தார்.

கவனம் சிதறியதாலோ என்னவோ, மெத்தனமாக ஒரு ஷாட் அடித்து ஜடேஜா பந்தில் கோஹ்லியிடம் கேட்ச் கொடுத்து ஸ்மித் அவுட் ஆனார்.

கோஹ்லி கோபம்

ஸ்மித் அடித்த பந்தை கேட்ச் செய்த விராட் கோஹ்லி, ஸ்மித்தை பார்த்து, வெளியே போ என்பதை போல கையை அசைத்தார். போனில் பேசியபடி பேட் செய்ததே கோஹ்லி கோபத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

ஸ்மித் பதிலடி

ஸ்மித் பதிலடி

இதுகுறித்து ஸ்மித்திடம் நிருபர்கள் கேட்டபோது, விராட் கோஹ்லிக்கு இது தேவையில்லாத வேலை என்று பதில் சொன்னார். அதேநேரம், போனில் பேசியபடி பேட் செய்தது தவறு என ஆஸ்திரேலிய ரசிகர்கள் கூறுகிறார்கள்.

வாட்சன் கருத்து

வாட்சன் கருத்து

இந்நிலையில், ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் ஷேன் வாட்சனிடம், இச்சம்பவம் குறித்து நிருபர்கள் கேட்டபோது, அவர் கூறியது: விராட் கோஹ்லி, எப்போதுமே ஆக்ரோஷமாக செயல்பட கூடிய வீரர். விளையாட்டுடன் அவர் ஒன்றிப்போயிருப்பார்.

ஆரோக்கிய போட்டி

ஆரோக்கிய போட்டி

விராட் கோஹ்லி மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இருவருமே உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்கள். எனவே இவ்விருவருக்குமே, யார் சிறந்த பேட்ஸ்மேன் என்பதில் ஆரோக்கியமான போட்டி இருந்துவருகிறது.

சிக்கலில் சிக்கிவிடுவார்

சிக்கலில் சிக்கிவிடுவார்

விராட் கோஹ்லி ஆக்ரோஷமாக செயல்படும் நண்பர்தான். இருப்பினும், இந்த பழக்கம் அவரை ஒருநாள் சிக்கலில் மாட்டி வைக்கும். எனது அனுபவத்தில் இருந்து இதை சொல்கிறேன். இருப்பினும், இந்த பழக்கம்தான் அவரை சிறப்பான வீரராகவும் வார்த்தெடுக்கும். இவ்வாறு ஷேன் வாட்சன் கூறினார்.

ஆஸ்திரேலியர்களுக்கு பதிலடி

ஆஸ்திரேலியர்களுக்கு பதிலடி

ஆஸ்திரேலியர்கள் ஸ்லெட்ஜிங் செய்வதில் வல்லவர்கள். இந்திய சுற்றுப்பயணத்தில் அவர்களின் சீண்டல் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விராட் கோஹ்லி, முந்திக்கொண்டு ஆஸ்திரேலியர்கள் பாணியில் பதிலடி கொடுத்துவருவது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, January 28, 2016, 15:40 [IST]
Other articles published on Jan 28, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+