Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மீண்டும் டெஸ்ட் போட்டி.... ரொம்ப உற்சாகமா இருக்கு... நாளைய தினத்திற்காக காத்திருக்கும் கேப்டன்!

அடிலெய்ட் : மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க உள்ளது மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளதாக இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

Recommended Video

நாளை தொடங்கும் இந்தியா-ஆஸி. முதல் டெஸ்ட்: முதல் பகலிரவு… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு நாளைய போட்டிக்காக காத்திருப்பதாக கூறியுள்ளார்.

நாளை இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையில் அடிலெய்டில் பகலிரவு போட்டி துவங்கவுள்ளது.

விராட் கோலி பங்கேற்பு

விராட் கோலி பங்கேற்பு

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் 4 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடர் துவங்கவுள்ளது. நாளை அடிலெய்டில் முதல் பகலிரவு போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் கேப்டன் விராட் கோலி பங்கேற்கவுள்ளார். இதையடுத்து தனது குழந்தை பிறப்பையொட்டி அவர் நாடு திரும்பவுள்ளார்.

லாக்டவுனால் பாதித்த போட்டிகள்

லாக்டவுனால் பாதித்த போட்டிகள்

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏறக்குறைய ஒரு ஆண்டுகளாக டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி பங்கேற்கவில்லை. மாறாக லாக்டவுன் விதிக்கப்பட்டதையடுத்து 6 மாதங்களுக்கு மேல் வீடுகளில் முடங்கினர். போட்டிகளில் பங்கேற்க முடியாமல் வீட்டில் இருந்தது வீரர்களுக்கு பரிதவிப்பை தந்தது. அவ்வப்போது தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

விருப்பமுடைய விராட்

விருப்பமுடைய விராட்

டெஸ்ட் போட்டிகளில் மிகவும் விருப்பமுடையவர் விராட் கோலி. அதன் வடிவத்தை மாற்றுவது குறித்த ஐசிசியின் திட்டத்திற்கு முதல் எதிர்ப்பு குரல் கொடுத்தவர். அதன் வடிவத்தை மாற்றினால் கிரிக்கெட்டின் உண்மையான வடிவம் பாழாகிவிடும் என்று அவர் தெரிவித்திருந்தார்.

விராட் மகிழ்ச்சி

விராட் மகிழ்ச்சி

இந்நிலையில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடாமல் மாதக்கணக்கில் காத்திருந்த அவர் நாளைய தினம் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவுள்ளது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் நாளைய போட்டிக்காக காத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

Story first published: Wednesday, December 16, 2020, 18:53 [IST]
Other articles published on Dec 16, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+