For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

என்ன டெஸ்ட் மேட்ச்ங்க இது..கடைசி நொடி வரை பரபரப்பு.. பாக், நியூசி 2வது டெஸ்டில் திரில்லிங் முடிவு

கராச்சி : நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதிய 2வது டெஸ்ட் போட்டியில் பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சம் இல்லாமல் முடிவடைந்தது.

2 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் முதல் போட்டி சமனில் முடிவடைந்தது, இதனையடுத்து 2வது டெஸ்ட் போட்டி கராச்சியில் தொடங்கியது.

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரராக களமிறஙகிய டாம் லாத்தம், டிவோன் கான்வே ஜோடி அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

நல்ல தொடக்கம்

நல்ல தொடக்கம்

டாம் லாத்தம் 71 ரன்களில் ஆட்டமிழக்க, சிறப்பாக விளையாடிய டிவோன் கான்வே 122 ரன்கள் எடுத்துள்ளது. முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன் ஆடுகளத்தில் தூர் வெட்டுவது போல் நின்று 36 ரன்கள் சேர்த்தார். நடுவரிசையில் டாம் பிளாண்டல் 51 ரன்கள் எடுக்க, இறுதியில் மாட் ஹென்றி 68 ரன்கள் சேர்த்தார்.

பாகிஸ்தான் பதிலடி

பாகிஸ்தான் பதிலடி

இதன் மூலம் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 449 ரன்களுக்கு ஆட்டழிந்தது. இதனையடுத்து பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் விளையாடியது. அந்த அணியின் சவுத் சகில் மட்டும் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். சர்பிராஸ் அகமது 78 ரன்களும்,இமாம் உல் ஹ்க் 83 ரன்களும் எடுக்க, மற்ற வீரர்கள் குறிப்பிடத்தகும் வகையில் ரன் சேர்க்காததால் பாகிஸ்தான் அணி 408 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது.

319 ரன்கள் இலக்கு

319 ரன்கள் இலக்கு

41 ரன்கள் முன்னிலை பெற்ற நியூசிலாந்து அணி 2வது இன்னிங்சில் களமிறங்கியது. இதில் டாம் பிளாண்டல் மற்றும் பிரஸ்வெல் தலா 74 ரன்கள் சேர்க்க, டாம் லாத்தம் 62 ரன்கள் எடுத்தார். இதனால் நியூசிலாந்து அணி 277 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் டிகளர் செய்தது. 319 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கடைசி இன்னிங்சில் பாகிஸ்தான் களமிறங்கியது. அப்போது 2.5 ஓவரை மட்டுமே எதிர்கொண்ட பாகிஸ்தான் ரன் எடுக்காமல் 2 விக்கெட்டுகளை இழந்தனர்.

சர்ஃபிராஸ் அகமது சதம்

சர்ஃபிராஸ் அகமது சதம்

இதனால் கடைசி நாள் ஆட்டத்தில் நியுசிலாந்து வெற்றி பெற 8 விக்கெட்டுகள் தேவைப்பட்டது. இமார் உல் ஹக் 12 ரன்களிலும்,சான் மசூத் 35 ரன்களிலும், கேப்டன் பாபர் அசாம் 27 ரன்களிலும் ஆட்டமிழக்க, நியூசிலாந்தின் கை ஓங்கியது. எனினும் சர்பிராஸ் அகமது தனி ஆளாக போராடி சதம் விளாசினார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்க தவறியதால்,பாகிஸ்தான் அணி 287 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

பரபரப்பான ஆட்டம்

பரபரப்பான ஆட்டம்

கைவசம் 7 ஓவர்கள் இருந்த நிலையில், பாகிஸ்தான் வெற்றிக்கு 32 ரன்களும், நியூசிலாந்த வெற்றிக்கு ஒரு விக்கெட்டும் தேவைப்பட்டது. மேலும் சூரியன் வெளிச்சமும் மறைந்ததால் செயற்கை ஒளி மைதானத்தை ஆக்கிரமித்து கொண்டது. இதனால் யார் வெற்றி பெறுவார் என எதிர்பார்ப்பு எகிறிய நிலையில் நஷிம் ஷா அதிரடியாக விளையாடி 2 பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்தார். அப்போது பாகிஸ்தான் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் ஆட்டத்தை முடித்து கொள்வதாக நடுவர்கள் அறிவித்தனர். இதனையடுத்து போட்டி டிராவில் முடிவடைந்தது.

Story first published: Friday, January 6, 2023, 19:33 [IST]
Other articles published on Jan 6, 2023
English summary
Exciting Test match between Newzealand and Pakistan Ends in a draw
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+