Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய ஏ அணியில் விளையாடுவது சிறந்த தொடக்கம்..! ஒன் இந்தியாவுக்கு ஸ்ரேயாஸ் கோபால் சிறப்பு நேர்காணல்

பெங்களூரு:இந்திய ஏ அணியில் இடம்பிடித்து, இலங்கை ஏ அணிக்கு எதிராக விளையாடுவதை எனது கிரிக்கெட் வாழ்க்கையின் மிகச் சிறந்த தொடக்கமாக நினைக்கிறேன் என்று ஸ்ரேயாஸ் கோபால் கூறியிருக்கிறார்.

ஐபிஎல் தொடரில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடியவர் பந்து வீச்சாளர் ஸ்ரேயாஸ் கோபால். பெங்களூருக்கு எதிரான லீக் போட்டி ஒன்றில், ராஜஸ்தான் வெற்றி பெற காரணமாக இருந்தவர். அந்த தொடரில் ராஜஸ்தான் அணி பெற்ற முதல் வெற்றியும் அது தான். அந்த போட்டியில் கோலி, டி வில்லியர்ஸ் விக்கெட்டுகளை வீழ்த்தியவரும் ஸ்ரேயாஸ் கோபால். ஐபிஎல் தொடரில் 20 விக்கெட்டுகளை எடுத்திருக்கிறார்.

ஒன் இந்தியாவுக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி இதோ:

கேள்வி:2019ம் ஆண்டில் 20 விக்கெட்டுகளை எடுத்து இருக்கிறீர்கள்?இந்த ஐபிஎல் தொடரில் தாங்கள் கற்றது என்ன?

பதில்:ரொம்ப மகிழ்ச்சி. இன்னும் சொல்லப்போனால் இது தான் என்னுடைய ஆரம்பம். எனது திறமையை வெளிப்படுத்த எனக்கு கிடைத்த வாய்ப்பு. மேலும் அதிகளவில் கடுமையாக பயிற்சி எடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

கற்றுக் கொண்டேன்

கற்றுக் கொண்டேன்

கேள்வி:2018 மற்றும் 2019 என 2 சீசன்களில் ராஜஸ்தான் அணியில் விளையாடி இருக்கிறீர்கள்? அது பற்றி சொல்லுங்கள்?

பதில்:என் மீது நம்பிக்கை வைத்து தேர்வு செய்ததற்கு ராஜஸ்தான் அணி நிர்வாகத்துக்கு நன்றி. ஷேன் வார்னே, சாய்ராஜ் பகுதுலே, சோதி ஆகியோருடன் பழகும் வாய்ப்புகள் கிடைத்தது. சர்வதேச மற்றும் முதல்தர போட்டிகளில் விளையாடிய அவர்களிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். அந்த அனுபவங்களை எனது ஆட்டத்தில் பயன்படுத்திக் கொண்டேன். அணியின் திட்டம், உங்களின் திட்டம் குறித்து சரியாக புரிந்து வைத்திருக்க வேண்டும். அப்பொழுது தான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும்.

ஆட்டத்தில் அர்ப்பணிப்பு

ஆட்டத்தில் அர்ப்பணிப்பு

கேள்வி:அனில் கும்ப்ளேவுடனான அனுபவம் பற்றி சொல்லுங்கள்... அனுபவமிக்க கிரிக்கெட் வீரர்களிடம் இருந்து என்ன கற்றுக் கொண்டீர்கள்?

பதில்:நிறைய கற்றுக் கொண்டேன். குறிப்பாக களத்தில் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு எவ்வாறு தம்மை அர்ப்பணித்து ஆடுவது என்று கற்றுக் கொண்டேன். இக்கட்டான தருணங்களில், மனதளவில் எப்படி தயாராக வேண்டும் என்று தெரிந்து கொண்டேன். ஏன் என்றால்... மிக முக்கியமான சிறந்த எதிரணி பேட்ஸ்மென்களுக்கும் நாம் பந்துவீசுகிறோம். அது மிக பெரிய சவால். அந்த நேரங்களில் எப்படி அமைதியாக இருக்க வேண்டும், நமது திட்டத்தை எப்படி செயல்படுத்த வேண்டும் என்பதை கற்றுக் கொண்டேன். அவை எல்லாம் இனி என் எதிர்காலத்தில் பயன்படும் என்று நம்புகிறேன்.

சரியான திட்டம்

சரியான திட்டம்

கேள்வி:டாப் பேட்ஸ்மென்களான விராட் கோலி, டி வில்லியர்சுக்கு பந்து வீசும் போது, இது போன்ற ஆலோசனைகள் பயன்பட்டதா? அவர்களுக்கு எதிராக நீங்கள் நன்றாக பந்து வீசி இருக்கிறீர்கள்...

பதில்:ஒரு பந்துவீச்சாளராக இவர்களை போன்ற பேட்ஸ்மென்களுக்கு என திட்டம் வகுக்க முடியாது. என்ன மாதிரியான திட்டமாக இருந்தாலும் அவற்றை செயல்படுத்தும் வழிகளை செய்ய வேண்டும். அவற்றின் முடிவுகளை ஏற்றுக் கொள்ள வேண்டும். அணியிலும் ஒரு திட்டம் இருக்கும். அதனுடன் உங்களுடைய திட்டமும் ஒருங்கே அமைந்தால் வெற்றி தான். சரியாக திட்டமிட முடியாது... இருந்தாலும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப ஆட வேண்டும்.

பழகும் வாய்ப்பு பெற்றேன்

பழகும் வாய்ப்பு பெற்றேன்

கேள்வி:ஐபிஎல் தொடரை தவிர்த்து உள்ளூர் போட்டிகளில் கர்நாடகாவுக்கு விளையாடி 500 ரன்கள் 32 விக்கெட்டுகளை எடுத்திருக்கிறீர்கள்? 2 நேர் எதிரான தளங்களில் உங்களால் வெற்றியை தக்க வைத்துக் கொள்ள முடிகிறது?

பதில்:எனது சிறு வயது முதலே, இது போன்ற கிரிக்கெட் விளையாடு பவர்களுடன் பழகும் வாய்ப்பை பெற்றிருக்கிறேன். அதன் வழியாக அவர்களின் அனுபவத்தை கற்றிருக்கிறேன். பல அனுபவ வீரர்களுடன் பழகும் வாய்ப்பை பெற்றிருக்கிறேன். கடந்த 15, 20 ஆண்டுகளாக கிரிக்கெட் பற்றி அவர்கள் மனதில் இருந்தவை என்ன என்பதை அறிய முயற்சித்திருக்கிறேன். அவற்றை நான் விளையாடிய போட்டிகளிலும் செயல்படுத்தி இருக்கிறேன்.

எனது போராட்டம்

எனது போராட்டம்

கேள்வி:2018 முதல் 2019ம் ஆண்டு வரை, உங்களின் கிரிக்கெட் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம் இருக்கும். மக்களின் உங்களை பற்றி கணித்திருப்பர்கள், தனிப்பட்ட நபராக, ஒரு கிரிக்கெட் வீரராக எந்தளவுக்கு உங்களை நீங்கள் மாற்றிக் கொண்டிருக்கிறீர்கள்?

பதில்:அனுபவங்கள் நிறைய கற்றுக் கொடுத்திருக்கின்றன. நிறைய பேர் எனது 20 விக்கெட்டுகள் பற்றியும், ஐபிஎல் சீசன் பற்றியும் பார்த்திருப்பார்கள், பேசியிருப்பார்கள். ஆனால் என்னுடன் நெருக்கமாக இருக்கும் ஒரு சிலருக்கு தான் தெரியும்.. அதற்காக நான் எந்தளவுக்கு போராடினேன்? அந்த போராட்டங்கள் என்ன என்று? ஆனால் அவை எல்லாம் வாழ்க்கையின் ஒரு பகுதியே. உங்களின் ஆட்டத்திறமை, அந்த ஆட்டத்தை புரிந்து கொள்வது என அதனை நோக்கி முன்னேறிச் செல்ல வேண்டும். மும்பை இந்தியன்சின் சச்சினை பாருங்கள்... அவருக்கு 37 வயது. ஆனால் இன்னும் கிரிக்கெட்டில் கற்றுக் கொண்டிருக்கிறேன் என்கிறார். இப்பொழுது என்ன செய்ய வேண்டுமோ அதை சிறப்பாக செய்ய வேண்டும் என்பதில தெளிவாக இருக்கிறேன். அது மிகவும் கடினம் தான்.. நிச்சயம் ஒரு நாள் முடியும்.

சிறப்பாக விளையாட வேண்டும்

சிறப்பாக விளையாட வேண்டும்

கேள்வி:நீங்கள் இந்திய ஏ அணியில் இருக்கிறீர்கள். இலங்கை ஏ அணியுடன் விளையாட இருக்கிறீர்கள். இந்த தொடரை எப்படி எதிர்கொள்ள போகிறீர்கள்?

பதில்:இப்போதைக்கு எந்த திட்டமும் இல்லை. அந்த தருணத்தில் எந்தளவுக்கு சிறப்பாக விளையாட முடியுமோ அப்படி விளையாட வேண்டும் என்று நினைக்கிறேன். இந்திய ஏ அணியில் விளையாடுவது மிகச் சிறந்த ஒன்று. கடந்த காலங்களில் சிறப்பாக ஆடியதன் பலனாக இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பெரியளவில் எதுவும் சிந்திக்கவில்லை. ஆகவே, எப்போதும் போலவே சிறப்பாகவே விளையாட வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.

Story first published: Monday, May 27, 2019, 21:42 [IST]
Other articles published on May 27, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+