Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Exclusive: ஜூன் 25 உலக கோப்பை தினம்.. கேட்கிறார் கிர்மானி!

பெங்களூர்: தந்தையர் தினம், அன்னையர் தினம்போல, இந்திய கிரிக்கெட் அணி முதல் முறையாக, உலக கோப்பையை வென்ற ஜூன் 25ம் தேதியை (1983ம் ஆண்டு, உலக கோப்பை தினமாக இந்தியா கொண்டாட வேண்டும் என்று முன்னாள் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் சையது கிர்மானி விருப்பம் தெரிவித்தார். கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, முதல்முறையாக உலக கோப்பையை ஜூன் 25ம் தேதிதான் வென்றிருந்தது.

32வது ஆண்டு விழா

32வது ஆண்டு விழா

"இவ்வாண்டு, ஜூன் 25ம்தேதி, இந்தியா முதல் முறையாக கோப்பையை வென்ற 32வது ஆண்டு வெற்றி தினம். ஆனால், அது கொண்டாடியிருக்க வேண்டிய வகையில் கொண்டாடப்படவில்லை. எத்தனையோ தினங்களை இந்த நாடு கொண்டாடி மகிழும்போது, உலக கோப்பையை வென்ற தினத்தை மட்டும் புறக்கணிப்பது ஏன்" என்று ஆதங்கம் வெளிப்படுத்தினார் சையது கிர்மானி.

கீப்பர் கிர்மானி

கீப்பர் கிர்மானி

1983ம் ஆண்டு நடந்த உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் பைனலில், பலம்மிகுந்த வெஸ்ட் இண்டீசை 43 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாதனை படைத்தபோது, அந்த அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனாக விளையாடிய கிர்மானி, 'ஒன்இந்தியாவுக்கு' அளித்த பிரத்யேக பேட்டியில் தனது ஆதங்கத்தை இவ்வாறு வெளிப்படுத்தினார்.

உலக கோப்பை தினம்

உலக கோப்பை தினம்

கிரிக்கெட் ஆடும் அனைத்து உலக நாடுகளையும் வீழ்த்தி, முதல்முறையாக இந்தியா உலக கோப்பையை வெற்றி பெற்றது. அந்த தினம், உலக கோப்பை தினம் என்ற பெயரில் இந்தியாவில் கொண்டாடப்பட வேண்டும். அன்னையர்தினம், தந்தையர் தினம் உட்பட வருடத்தின் 365 நாட்களும் ஏதாவது ஒரு தினம் கொண்டாடப்பட்டு வரும்போது, உலக கோப்பை தினத்தை ஏன் கொண்டாடக்கூடாது என்று கேள்வி எழுப்பும் கிர்மானி, உலக கோப்பை பைனலில் 14 ரன்கள் அடித்ததுடன், 1 கேட்ச்சும் பிடித்து வெற்றிக்கு பங்களிப்பை கொடுத்தவர்.

இப்படி செய்யலாம்..

இப்படி செய்யலாம்..

உலக கோப்பை தினம் என்ற ஒன்றை கொண்டாடுவதன் மூலம், இளைஞர்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். 2011ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்ற வீரர்களையும், 1983ம் ஆண்டின் அணியில் இடம்பெற்ற வீரர்களையும் அழைத்து, இளைஞர்களுடன் கலந்துரையாட செய்வதன்மூலம், உற்சாகத்தை ஏற்படுத்த முடியும் என்று பிசிசிஐக்கு மறைமுகமாக யோசனை தெரிவித்தார் கிர்மானி.

புறக்கணிப்பு

புறக்கணிப்பு

'பிசிசிஐ இந்த விஷயத்தில் கவனம் செலுத்தவில்லை என்று கூறுகிறீர்களா..' என்ற கேள்விக்கு பதிலளித்த 65 வயது கிர்மானி, "பிசிசிஐ அல்லது வேறு யாரையும் குறை சொல்வது எனது நோக்கமில்லை. அதேநேரம், பிசிசிஐ என்னை புறக்கணித்து வருவது நிஜமாகவே புண்படுத்துவதாக உள்ளது. பிசிசிஐயின் எந்த ஒரு நடவடிக்கைகளிலும், எனக்கு பங்கில்லை என்பது என்னை காயப்படுத்துகிறது. கிரிக்கெட்டுக்காக எனது பங்களிப்பு ஏதாவது இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்" என்று தனது விருப்பத்தையும் கூறினார். பிசிசிஐ, கிர்மானியின் விக்கெட் கீப்பிங் அனுபவத்தை அடுத்த தலைமுறைக்கு கடத்த பாலமாக இருக்கும் என்று நம்பலாம்.

Story first published: Friday, June 26, 2015, 10:45 [IST]
Other articles published on Jun 26, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+